ஜ, ஷ, ஸ, க்ஷ என்ற எழுத்துக்களைத் தமிழ் அரிச்சுவடியில் நமது
பூர்வீகர் சேர்த்திருக்கிறார்கள். இவற்றைச் சேர்க்காவிட்டால் தமிழ் நேரே பேச
முடியாமலும், எழுத முடியாமலும் போய்விடுமென்று அவர்களுக்கு
அச்சமுண்டாயிற்று.
"தொல்காப்பியர் கட்டின அரிச்சுவடி போதாவண்ணமாக நமது பாஷை
வளர்ச்சி பெற்றவுடனே நமது முன்னோர்கள் மேற்காட்டிய எழுத்துக்களையும்
சேர்த்தார்கள்.
"நாமும் அப்படியே நமக்கு இக்காலத்தில் ஏற்படும் உச்சரிப்புக்
கஷ்டங்களை நிவிருத்தி செய்து கொள்ளுவதற்கு, கிரந்த எழுத்துக்களைச்
சேர்க்கலாமென்று சில பெரியோர் கருதுகிறார்கள் . ஆனால் அதைக்
காட்டிலும் அடையாளங்கள் போடுவது சுலபமான வழி.
"இப்போதுள்ள அரிச்சுவடியிலே பழகிய தமிழருக்கு மேற்படி
அடையாளங்களால் எவ்விதச் சங்கடமும் நேரிடாது. தப்பாகவோ, சரியாகவோ
வழக்கம்போல வாசித்துக்கொண்டு போவதை அடையாளங்கள் த டுக்கமாட்டா.
கிரந்த எழுத்துக்களைக் கொண்டு சேர்த்தால் பாதி படிக்கும்போதே நிறுத்தி
விட நேரிடும்.
"ப்ரெஞ்ச், இங்கிலிஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும் , ஹிந்தி
முதலிய நமது நாட்டு பாஷைகளிலும், உயிருள்ள பாஷைகளிலே வளர்வன
வெல்லாவற்றிலும் - உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில்
சில அடையாளங்கள் சேர்த்து ஸௌகர்யப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
இதனால் எழுத்து வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய
வழியை அனுசரித்து நமது தமிழ்மொழி விசாலமடைய வேண்டமென்பதே
என்னுடைய விருப்பம்"1
பாரதியார், வ.உ.சியின் பெயரைக் குறிப்பிடாமல் பதிலளித்துள்ளது
பாராட்டத்தக்கதாகும். வ.உ.சிக்கும் தமக்குமிடையேயுள்ள நட்பைக் காக்கும்
பொருட்டாகவே அவரது பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார்போலும்!
'வீர விளக்கு!"
வ.வே.சு. ஐயர், தீவிர தேசபக்தர், பாரிஸ்டர் படிப்புக்காக
இங்கிலாந்திலிருந்த போது ஆயுதப்புரட்சியிலே நம்பிக்கை
1. 'ஞானபாநு':செப்,1915