வைத்திருந்தார். இங்கிலாந்தில் நடந்த பலாத்கார நிகழ்ச்சிகள் சிலவற்றிலே
இவர் தொடர்பு கொண்டிருந்தார் என ஐயுற்றுப் பிரிட்டிஷ் ஆட்சி இவரைக்
கைதுசெய்ய முயன்ற போது, இவர் மாறுவேடம் பூண்டு தப்பிவந்து,
தமிழகத்தில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். ஐயரவர்கள், தாம் ஆசிரியராக இருந்த "தேச பக்தன்" வார இதழிலே
வெளியான ஆட்சேபகரமான ஒரு தலையங்கத்துக்காக 1921ல் 9- மாதச்
சிறைத்தண்டனை பெற்றார். தண்டனையை ஆந்திர மாநிலத்திலுள்ள பெல்லாரி
மத்திய சிறையில் கழித்தார். சிறை புகுந்து சிப்பியேந்திய காலத்திலும் தமிழ்
மொழியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.
சிறைவாசத்தின் போது கம்பராமாயணத்தை ஆழ்ந்து படித்து ஆராய்ச்சி
செய்து, ' Study of Kamban ' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் ஒரு நூல்
எழுதினார்.அதிலே வான்மீகியின் வடமொழி ராமாயணத்தோடும துளசிதாசரின்
இந்தி மொழி ராமாயணத்தோடும் கம்ராமாயணத்தை ஒப்புநோக்கி, காப்பிய
உலகிலே கம்பனுக்குள்ள தனிச்சிறப்புகளை எடுத்துக்காட்டி, தமிழ்மொழிக்குப்
பெருமை தேடினார்.
சிறையிலிருந்தபோதும் ஐயர் கம்ப ராமாயண ஆராய்ச்சிக்காகப் பெரு
முயற்சிகளை மேற்கொண்டதற்குச் சான்றாக, பெல்லாரிச் சிறையிலிருந்து
திரு.பா. ஆதிமூர்த்தி என்ற தம் நண்பரொருவருக்கு அவர் 1921ல் எழுதிய
கடிதத்தின்1 சில பகுதிகளைப் பார்ப்போம்:
அன்புள்ள சகோதர,
நான் இங்கே இருக்கிற சங்கதியைப்பற்றித் தாங்கள் பத்திரிகை மூலம்
அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இன்னும் ஆறுமாதங்கள் இங்கே இருக்க
வேண்டியிருக்கிறது. அவையும் இம்மூன்று மாதங்கள் சென்றது போலவே
இலக்கிய முயற்சியில் கழியும் என்றே எதிர்பார்க்கிறேன்.
தங்களால் இப்பொழுது எனக்கு ஒரு காரியம் ஆக
வேண்டியிருக்கிறது. அஃதாவது, நான் எழுதி வரும் Study of
Kamban ல் வால்மீகியும் துளசிதாசரும் எழுதியுள்ள ராமாயணங்
களின் அந்தந்தக் கட்டங்களைக் கம்பனுடைய கட்டங்களோடு்