பக்கம் எண் :

116விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

சீர்  தூக்கிக்  காட்டவேண்டியதவசியமாக  இருக்கிறது.  அதற்காக Griffths
Translation of Valmiki Ramayanam & Tulasi Das ஆகிய இவ்விரண்டு
நூல்களும் எனக்கு அவசியமாயிருக்கின்றன.

      இதுதவிரத்   திலகரின்  " கீதா ரகசியம் " பார்க்கவேண்டும்  என்கிற
ஆசையிருக்கிறது.  இந்நூல்களில்  குறைந்தது  இரண்டு  காசியில் கிடைக்கு
மாதலாலும்    அவைகளை   வருவித்துத்    தருவோர்    வேறொருவரும்
இல்லாமையாலும்  தற்காலம்  சிறையில்  என்னிடம்  உள்ள  பணம்  இவை
வாங்கப் போதியதல்லவாதலாலும் தங்களுக்குச் சிரமம் கொடுக்கிறேன்.

     சிறை   நின்று  வெளிவந்ததும்  அவற்றின்  விலையைத்  தங்களுக்கு
அனுப்பிவிடுகிறேன்.

      Study of Kamban 160  பக்கம்   முடித்திருக்கிறேன்.  இப்பொழுது
லக்ஷ்மணனுடைய  குண   விமர்சனத்திலிருக்கின்றேன். புத்தகம் 500  பக்கம்
வரையில்  போகும்  என  நினைக்கிறேன். உதாரணப்பாட்டுகளை ஆங்கிலக்
கவியாகவே பெரும்பாலும் செய்ய முயன்றுவருகிறேன்.

      வடநாட்டு    வித்துவான்களுக்கும்     தமிழ்நாட்டவரில்    தமிழை
மறந்தவர்க்கும்  கம்பனுடைய  பெருமையைக் கூடியமட்டில்  வெளிப்படுத்திக்
காட்டும் என நம்புகிறேன்.

                                வந்தேமாதரம்
                             வ.வே.சு.ஐயர்

    சிறைமீண்ட பின்னர்ச் சிறையில் தாம் ஆங்கிலத்தில் எழுதிய ஆராய்ச்சி
நூைலை ஐயர் வெளியிட்டார்.

     ஐயரவர்கள் ' பால பாரதி 'என்ற பெயரில் இலக்கிய மாத ஏடு ஒன்றை
நடத்திவந்தார்.   அதிலே,   கம்பராமாயண    ஆராய்ச்சியைத்    தமிழில்
தொடர்ச்சியாக எழுதி வந்தார்.

      திலகர்  காலத்துக்  காங்கிரஸ்காரர்களில்   தாய்மொழியின் -தமிழின்
வளர்ச்சிக்குப்   பாடுபட்டவர்களிலே   மகரிஷி  வ.வே.சுப்பிரமணிய  ஐயர்
ஒருவராவார். இவர், 'வ.வே.சு. ஐயர்' என்றே அழைக்கப்படுகின்றனர்.

     ஐயரவர்கள், இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தமது
தாய்    மொழியான      தமிழோடு,      ஆங்கிலம்  -    சம்ஸ்கிருதம்-