பிரெஞ்சு - அரபு - இந்துஸ்தானி ஆகிய வேற்று மொழிகளிலும் புலமை
பெற்றிருந்தார் . பிற மொழிகளில் தாம் பெற்றிருந்த புலமையைத் தமிழ்
மொழியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தினார். கம்பன் பெருமை
ஐயர், கம்பராமாயணத்தை வால்மீகி ராமாயணத்துடன் ஒப்பிட்டு
ஆராய்ந்து தமது " பால பாரதி " யிலே எழுதிய தொடர்கட்டுரையில் சில
பகுதிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:
"....வால்மீகி ராமாயணமானது இடைக்கிடை தங்கக்கொடிகள் கொழுத்து
ஓடினாலும் பூமியிலிருந்து அப்படியே பாறையோடு வெட்டி எடுக்கப்பட்ட
கட்டியைப் போன்றதுதான். கம்ப ராமாயணம் அத்தங்கத்தை எடுத்து உருக்கி,
மாசுபோக்கி வார்த்த சொர்ண விக்கிரகமாகும்."
"கிஷ்கிந்தா காண்டத்தின் பிரதான பாகமான வாலிவதை ராமாயணத்தின்
வஸ்துவுக்கு அவ்வய சம்பந்தம் வாய்ந்ததன்றாதலால் அதை எடுத்து
விட்டதனால் கதைக்கு யாதொரு ஊனமும் வராது. ஆனால் , கம்பன் தன்
நாடகத் திறமையனைத்தையும் இந்த வாலிவதைப் படலத்தில் கொட்டி வைத்து
விட்டான். இந்த வாலிவதை உபாக்கியானத்தை மாத்திரம் எழுதி வைத்துவிட்டு
வேறொன்றும் எழுதி வையாமல் இறந்திருந்தாற் கூட அறிஞர் அவனை
உலகத்து மகாகவிகளின் வர்க்கத்தில் சேர்க்காமல் விடத்துணியார்.
அத்துணைச்சிறப்பு வாய்ந்தது கம்பனுடைய வாலி வதை உபாக்கியானம்."
"ஒரு உத்கிருஷ்டமான கவிக்குப் பிறகு இன்னொரு கவி அதே
கதையைப் பாடினானானால், முதல் கவியின் போக்கும் வாக்கும் பின்னவன்
காலைச் சுற்றி நிற்கும் ஈயத் தளை போலாகிவிடுகின்றன. ஆனால், கம்பன்
பூமண்டலத்தை ஓர் தலையால் தாங்கும் ஆயிரந்தலை ஆதிசேஷன் போல
வால்மீகியின் கனத்தை அலக்ஷியமாய்த் தாங்கி நடப்பதோடு , அவனது
கதையையும் தனக்குக் குற்றேவல் செய்து, தன் உத்பிரேக்ஷகளை
அலங்கரிக்கும் மணிப்பூண்களாகச் செய்துவிடுகிறான்."
" பிறருடைய கதைகளைச் சுவீகரித்து அவற்றை முதனூ
லாசிரியன் போலவே சுதந்திரமாகவும் கம்பீரமாகவும் நடத்திக்