பக்கம் எண் :

118விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

கொண்டு போவதில்  கம்பன்   ஹோமரின்    கதைகளைச்     சுவீகரித்துக்
கையாண்ட   எஸ்கூலனுக்கும்  ஸோபோகிளனுக்கும்    ஓர்படி  உயர்ந்தவன்
எனவே அறிஞர் கண்டுகொள்வர்."

     "ரஸவாதிகளுக்கும்  அகப்படாத  ஆயிரத்தெட்டு  மாற்றுத்  தங்கத்துக்
கிணையாக  கம்பீரமான  செய்யுள்களும்,  அவற்றைப்  பொருந்த  அமைத்து
வைக்கும்  ரசனைத்  திறனுமே  கம்பனைப்  பிராகிருதமான கவிகளினின்றும்,
அவன்  ஜாதியைச்  சார்ந்த  கலைவலாளரான  வால்மீகி, வியாசன், ஹோமர்,
மில்தன் முதலியோரினின்றும் வேறுபடுத்தித் தனிச் சிறப்புத் தருகின்றன."1

      "போரை  வர்ணிப்பதில்  ஹோமரேதான் சிறந்த கவி என்ற மேனாட்டு
ஆசிரியரின்  கூற்றுக்களைக்  கண்டும்,  ஹோமரின்  உத்கிருஷ்டமான  யுத்த
வர்ணனைகளைப்  படித்துப்பார்த்தும் நாம் மயங்கிப்போய் ஹோமரின் போர்ச்
சித்திரங்களைவிட  உயர்ந்த   சித்திரங்கள் கிடையா  என  மதிந்திருந்தோம்.
ஆனால்,  கம்ப ராமாயணத்தின்   யுத்த  காண்டத்தைப் படித்துப் பார்த்ததும்,
கம்பன் போர்  வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில
இடங்களிலும்  சில   விஷயங்களிலும்  ஹோமரது    போர்  வர்ணனையை
வென்றிருக்கிறானென்றும் கண்டு கொண்டோம்."2

     ஐயர்  எழுதிய க ம்பராமாயண ஆராய்ச்சி பற்றிக் கண்டனம் எழுந்தது.
வான்மீகியின் புலமையைக்  குறைத்துக்  கூறுவதாக வடமொழிப் புலவர்களிலே
சிலர் ஐயரைக் கடிந்து கொண்டு, கடிதங்கள் எழுதினர். தி.வை.சேஷகிரி  ஐயர்
என்பவர்  எழுதிய  கடிதத்தின் சில பகுதிகளையும்    அதற்கு ஐயர் எழுதிய
பதிலின் முக்கியப் பகுதிகளையும் இங்குத் தருகின்றோம்:

தி.வை.சேஷகிரி ஐயரின் கண்டனம்:

     "சஞ்சிகையைப்  படிக்குங்கால்  கம்பரை   மேன்மிக்க  மட்டுமல்லாமல்
வால்மீகியை  இழிவூட்ட  உத்தேசித்தது  போல்  உணர்ந்தேன். "இவ்விரண்டு
ஆசார்யர்களின்  ஒற்றுமை  வேற்றுமையை  உணர்வதற்கு,  சில விஷயங்கள்
அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.


1. "பால பாரதி", மார்ச்சு; 1925
2. "பால பாரதி", மார்ச்சு; 1925