(1) ஒவ்வொரு கவியின் காலம் எது? (2) அக்கவி உத்தேசித்த ஜனங்கள் எவர்கள்? (3) அவர் வெளியிட்ட சந்தர்ப்பம் என்ன?-இவைகள் இன்றியமையாத குறிப்புகள். "இந்த முக்கியக் கவனிப்புகளுடன் இரண்டு காவியங்களையும் ஆராய்ச்சி செய்தால் நம்முடைய புத்தியினால் தேர்ந்தெடுக்கப்படும் வெகுவான மேன்மைக் குறைவுகள் காண்பிக்க இடம் இருக்கமாட்டாது." வ.வே.சு.ஐயர் பதில்: "ஸ்ரீ. சேஷகிரி ஐயர் நான் வால்மீகியைத் தாழ்த்த விரும்புவதாகக் கூறுகிறார். ஓர் நூல் மற்றோர் நூலைவிட உயர்ந்தது என்று ஒருவன் நிரூபிக்க முயலும்போது பின் கூறப்பட்ட நூலின் ஆசிரியனை அது இழிவுபடுத்திக் கூறுவதாகும் என்று மனிதர் சொல்லப் புகுவரேல் அது ஆராய்ச்சி முறையையே எதிர்ப்பதாகும். "மகா காவியங்களின் வரிசையில் கம்பராமாயணத்தின் ஸ்தானம் எது என்று நிர்ணயிப்பதே என் நோக்கம் ஆகும். இவ்வாராய்ச்சியில் வால்மீகி ராமாயணத்தின் ரசனை முறைக்குத் தாழ்ந்ததாக இருப்பின் எடுத்துக்காட்ட வேண்டியது என் கடனாகும். “இதற்கு ஸ்ரீமான் ஐயர் சொல்லும் கால தேச சந்தர்ப்பத் தொகுதியின் விசாரணை பெரிதும் உதவி புரியாது என்று அஞ்சுகிறேன். "வால்மீகியின் இரசனைச் சுவை இல்லவே இல்லை என்று நான் கூறுவதாக ஒருநாளும் ஆகாது. மற்று இரசனைச் சுவையில் வால்மீகி ராமாயணம் கம்ப ராமாயணத்தைத் தவிர மற்றெல்லா மகா காவியங்களையும் இதிகாசங்களையும் விட உயர்ந்தது என்பதே எனது தாழ்ந்த அபிப்பிராயம்"1 ஐயர், வாழ்வாங்கு வாழ வழியின்றி வருந்தினார். அவருடைய மனைவியும் ஒரே மகளும் வறுமையால் வாடினர். அந்த நிலை 1. "பாலபாரதி", மார்ச்சு, 1925 |