பக்கம் எண் :

120விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

யிலும்   தம்முடைய    நூல்களை  வெளியிடத் தம்பால்  அன்பு  கொண்ட நண்பர்களிடம் பொருளுதவி  பெற்றார். அவர்  வெளியிட்ட  நெப்போலியன், கரிபால்டி  ஆகிய சரித்திர   நூல்களை  அரசினர்  பறிமுதல்   செய்ததால்  அவருக்குப்  பொருள் இழப்பு ஏற்பட்டது.

'தீக்கிரை யாக்குவேன்!'

     கம்பராமாயண  பால  காண்டத்தில்  சில  செய்யுட்களை  நீக்கிவிட்டுப்
பதம்   பிரித்தும் " பாலகாண்டச் சுருக்கம் " என்ற  பெயரில்  வெளியிட்டார்.
அதனை,  தமிழ்ப் புலவர்களிலே சிலர் ஆட்சேபித்தனர். திரு.பா. ஆதிமூர்த்தி
என்ற  தம்  நண்பரொருவரின் ஆட்சேபணைக்குப்   பதிலளித்துப்   புதுவை
யிலிருந்து 28-5-1918ல் ஐயர் எழுதிய கடிதத்தின் முக்கியப் பகுதிகள் வருமாறு:

     "என் பதிப்பு 'தமிழின் மரணத்துக்கு வழிகாட்டுகிறது' என்று தங்களுக்குத்
தோன்றும்போது  அதை  நான் தங்களுக்கு வி.பி.யில் அனுப்பக்கூடாது என்று
நிறுத்திக்கொள்கிறேன்.

      "தங்கள்   கடிதத்தினின்றும்   தங்கள்  ஆட்சேபணைக்குக்  காரணம்
ஒன்றும் தெரியவில்லை.செய்யுள்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது தங்களுக்குச்
சந்தோஷமே  உண்டாயிருக்கிறது. பல  பாட்டுகளை விட்டு  அச்சிட்டிருப்பது
தங்களுக்கு வருத்தத்தை உண்டு செய்திருக்கிறது. புராணங்களைக் குறுக்குகிறது
நான் ஆரம்பித்த வழக்கமில்லை. ராமாயண ஆரம்பத்தில் பார்த்தால்,ஆதியில்
அது 100 கோடி சுலோகம் கொண்டதாகயிருந்ததாகவும் பிறகு நாளாவர்த்தியில்
ஜனங்களுடைய   சிரத்தை   சாவகாசம்  முதலியவற்றின்  குறைவைக்  கருதி
அப்போதைக்கப்போது ஆசிரியர் சுருக்கினார்கள் என்றும் ஏற்படும்.

     "தமிழிலும்  தொகை  நூல்களெல்லாம்  வேறு  விஸ்தாரமான  செய்யுள்
தொகுதிகளின்றும்  சுருக்கப்  பட்டவை  என்று  ஏற்படும்.   பஞ்சதந்திரமும்,
வில்லிபுத்தூரார்  பாரதமும்  முதனூலில் பெரும் பாகங்களை வெட்டி விட்டுக்
கதைச் சிதைவின்றி  எழுதப்பட்டவை என்று  தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

     "என்    பதிப்பு    தமிழின்    மரணத்துக்குத்    தொலைவாகவேனும்
காரணமாக      இருக்கும்      என்று       எனக்குத்      தோன்றினால்
இத்தனைப்   பணம்    செலவழித்திருத்தும்    நாம்   கஷ்ட   நிலைமையி