லிருப்பினும் இன்றைக்கே என் கையிலுள்ள பிரதிகளனைத்தையும் தீக்கிரையாக்குவேன். தங்கள் கடிதத்தைக் கண்டபிறகும் அது இதற்கு மாறான குணமுடையது என்று தோன்றுவதால் அதைப் பரப்ப முயன்று கொண்டிருக்கிறேன்."1 வ.வே.சு. ஐயர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவரென்றாலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதிராக ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அடிமைப் புத்தியை அவர் வெறுத்தார். ஐயருக்கிருந்த ஆங்கில ஆதிக்க எதிர்ப்புணர்ச்சி பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய திரு.வெ.சாமிநாதசர்மா அவர்கள் சொல்லக் கேட்போம்: "ஐயருடைய பன்மொழிப் புலமை என்னை வியக்கச் செய்தது. தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளி, ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் ஆகிய பாஷைகளில் அவர் வல்லவர். தெலுங்கும், கன்னடமும் பேசக் கேட்டிருக்கிறேன். அந்தந்த மொழியினர் பேசுகிற மாதிரியே பேசுவார். உச்சரிப்பில் சிறிதுகூட மாற்றம் இராது."2 "ஐயர் பல மொழிகளில் புலமை பெற்றிருந்த போதிலும், தம் நண்பர்களுடன் அநேகமாகத் தமிழிலேயே பேசுவார். ஆங்கில மொழியறிந்த தமிழர் சிலரிடத்தில் காணப்படுவது போல இடையிடையே ஆங்கிலச் சொற்கள் விரவிவர மாட்டா. சுத்தத் தமிழிலேயே பேசுவார். "அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேச்சு வருகிறபோது கூடக் கூடியமட்டில் அவற்றைத் தமிழிலேயே விளக்கி வைப்பார்."3 தமிழ் மரபின் காவலர்! ஆங்கிலம் அல்லது ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பெயர்ச்சொற்களைத் தமிழ் மரபுக்கேற்ப மாற்றுவதிலே ஆர்வங் காட்டினார். சான்றாக, மெக்டொனால்டு என்ற பிரிட்டிஷ் முன்னாள் பிரதமரை மெக்தோனால்டு என்றும், அரிஸ்டாட்டல் என்ற கிரீக் 1. "பாலபாரதி," ஆகஸ்டு, 1925 2. "நான்கண்டநால்வர்", பக்.95 3. "நான்கண்டநால்வர்", பக்.97-98 |