ஆசிரியரை ஆரிஸ்தோத்தலன் என்றும், பிளேட்டோ என்பாரைப் பிளாத்தன்
என்றும், டால்ஸ்டாய் என்ற ருஷ்ய அறிஞரைத் தோல் ஸ்தோயி என்றும்
எழுதினார். இது பற்றிய ஐயர் தந்த விளக்கம் வருமாறு: "மேனாட்டுக் காவியங்கள், கதைகள், நாடகங்கள் முதலியவற்றை
மொழிபெயர்ப்போரும் அவைகளைப் பற்றி எழுதுவோரும்,அவைகளில் வரும்
சிறப்புப் பெயர்களை, ஒன்று தமிழில் பொருள் தரக்கூடிய பெயர்களாக
மாற்றிவிடுகிறார்கள், அல்லது ஆங்கிலத்தில் அவை உச்சரிக்கப் படுகிறபடியே
எழுதுகிறார்கள்.
"காலக்கிரமத்தில், அன்னிய நாட்டு வீரர்கள், கவிகள் முதலியோரின்
பெயர் நமது காவியங்களிலும் வசன நூல்களிலும் சேர்க்கப்படவே
இருக்கின்றனவாதலாலும் அன்னியநாட்டுச் சரித்திரங்கள், காவியங்கள்,
வீரர்கள் முதலியோரைப் பற்றித் தமிழர் எழுதும் முதனூல்களும் விமர்சன
நூல்களும், மொழி பெயர்ப்புகள் மூலமாயாவது அன்னிய நாட்டாரால்
படிக்கும்படிச் செய்ய வேண்டியது அவசியமாதலாலும், மேற்சொன்ன சிறப்புப்
பெயர்களைத் தமிழுடன் பொருந்தும் படியும், அன்னியர் படித்த மாத்திரத்தில்
அறிந்துகொள்ளும் படியும் அமைக்கவேண்டியது அவசியம் எனக் கருதி நாம்
வெகுநாட்களாக அத்தயை பெயர்களை அவைகளின் பகுதியை அப்படியே
வைத்தும், அவைகட்குத் தமிழ் விகுதியைச் சேர்த்தும் மாற்றி எழுதி
வருகிறோம். பால பாரதி' யிலும் அதே முறையைத்தான் முடிந்த அளவுக்கு
ஆண்டு வருகின்றோம்."1
ஐயரவர்கள், தமது " பால பாரதி " பத்திரிகையில் பக்கம், வருஷம்,
மாதம், தேதி முதலியவற்றைக் குறிப்பிடும் எண்களைத் தமிழ் எண்களாகவே
பயன்படுத்தினார். தாம் ஆசிரியத் தொழில் புரிந்த " தேசபக் தன்" தினசரிப்
பத்திரிகையிலும் தமிழ் எண்களையே பயன்படுத்தச் செய்தார். நண்பர்களுக்கு
எழுதும் கடிதங்களிலும் இந்த ' வைதிகத் 'தை வழக்கப்படுத்தியிருந்தார்.
இதனைக் கடுமையாக எதிர்த்த நண்பர்களுக்கு ஐயர் தந்த விளக்கம் வருமாறு:
"தமிழ் நூல்களின் பக்க எண்கள் அரபி என்று
சொல்லப்படுகிற ஐரோப்பிய எண்களாயிருப்பதைப் பார்க்கும் அன்னிய
1. "பாலபாரதி", டிசம்பர், 1924.