நாட்டினரும், பிற்காலத் தமிழரும் தமிழிற்குச் சொந்தமான அல்லது சொந்தமாய்ப் போய்விட்ட எண்களே இல்லையோ என்று ஐயுறுவார்கள் என்பது அசம்பாவிதமாகுமோ?"1 'தனித் தமிழ்ச் சிக்கல்! வ.வே.சு.ஐயர், 'தனித்தமிழ்'க் கொள்கையைக் கொண்டிருந்தாரென்றாலும் ,அவர் எழுதிய உரைநடையிலே வடமொழிச் சொற்கள் மிகுதியும் கலந்திருக்கக் காண்கிறோம். அந்நாளில், மக்கள் பேசுந்தமிழிலே வடசொற்கள் மிகுதியும் கலந்திருந்தன. ஆங்கிலச்சொல் கலவாத தனித்தமிழில் எழுதுவதும் படிப்போர் அதனைப் புரிந்துகொள்வதும் எளிதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், வடமொழிச்சொல் கலவாத தனித்தமிழில் எழுதுவதோ, படிப்போர் அதனைப் புரிந்துகொள்வதோ இன்றுள்ள நிலையிலேயே அவ்வளவு எளிதாக இருக்க வில்லை யென்றால், அன்றைய நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள் போன்ற பெரும் புலவர்கள், பண்டிதர்களானோர் படிப்பதற்காக அவர்கள் ஈடுபட்டிருந்த மொழித்துறை பற்றியே அந்நாளில் நூற்கள் இயற்றினர். சாதாரணப் பொதுமக்களோடு அவர்கள் எந்த வகையிலும் தொடர்பு கொண்டவர்களாக இருக்கவில்லை. ஆகவே, வடமொழிச் சொல் கலவாத தனித்தமிழில் எழுதுவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். அதனால் நாட்டுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், வ.வே.சு.ஐயர்,பாரதியார், சுப்பிரமணிய சிவம் ஆகிய தேசியத் தலைவர்கள் நிலை இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகும். அவர்கள் சாதாரணப் பொதுமக்களோடு தொடர்பு கொண்டு, அவர்களிடையே தேசபக்தி- ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சியைப் பரப்புவதற்காகப் பத்திரிகை நடத்தினார் கள்,நூல் எழுதினார்கள். ஆகவே வழக்கில் வந்துவிட்ட வடமொழிச் சொற்கள் கலவாத "தனித் தமிழி”ல் எழுதுவதையோ, பேசுவதையோ அவர்கள் விரும்பு வதற்கில்லை. அதனால், அவர்களுடைய "தனித் தமிழ்'க் கொள்கை ஆங்கில ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிராக இருந்தது இயற்கை - எதிர்பார்க்க வேண்டியதுமாகும். 1. "பாலபாரதி", மே, 1925. |