பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 125

குருகுலப் பூசல்!

      வ.வே.சு.ஐயர், தமிழ்மொழியை  வளர்ப்பதோடு நில்லாமல், தமிழ்நாட்டு
இளைஞர்களை  இலட்சிய  வீரராக்க  விரும்பி,   சேரமாதேவி   பரத்துவாச
ஆசிரமத்திலே " தமிழ்க் குருகுல வித்தியாலயம் " ஒன்றை  நிறுவினார். ஐயர்,
'தமிழர்களையெல்லாம் சீக்கியர்களைப்போன்று வீரர்களாக்க வேண்டும்" என்று
அடிக்கடி கூறுவாராம். ஐயர் நடத்திய குருகுலத்தின் குறிக்கோள் பற்றிப் "பால
பாரதி" பத்திரிகையில் வெளியான ஒரு குறிப்பு வருமாறு:

     "நமது மகரிஷி இக்குருகுலம் தமிழர்களுக்கே சொந்தம், தமிழ்நாட்டிற்கே
உரித்தான பாக்கியம், தமிழ்மொழிக்கே பீடம் என்று அங்குரார்ப்பணம் செய்து
கொண்டு தனித்தமிழனாகவும் தமிழ்க்குருவாகவும் ஆரம்பித்தார். தமிழ்நாட்டை
நான்  வாழ வைப்பேனென்று  கங்கணம்   கட்டிக்கொண்டார். முற்காலத்தில்
கீர்த்தி ததும்ப வளர்ந்த "நளாந்தா" சர்வ காலாசாலையையும் வென்றது என்ற
நிலையில் இந்த  ஸ்தாபனத்தைக் கொண்டுவரச் சத்தியம் செய்துகொண்டார்"1

      ஐயர்,  தாம்  துவக்கிய  குருகுலத்தில்,  சில  அந்தணச் சிறுவர்கள் -
அவர்களுடைய     பெற்றோர்களின்       விருப்பப்படி -    தனித்திருந்து  
உணவருந்த    அனுமதித்திருந்தார்.    இது,   வருணசிரமப்படி    மாணவர்
களிடையே    உயர்வு     தாழ்வு   காட்டப்படும்  செயலென்று  கருதினார்.
அந்நாளில்  தமிழ்நாடு காங்கிரசிலே  மிகுந்த   செல்வாக்குடன்    விளங்கிய
டாக்டர் பி.வரதராசலு    நாயுடு.    இயற்கையிலேயே     வருணாசிரமத்தின்  
எதிரியான    பெரியார்   ஈ.வெ.ரா.வும்    டாக்டர்   நாயுடுவுடன்   சேர்ந்து
கொண்டார்.     இருவரும்     குருகுலத்தில்      காணப்படும்     வருணா
சிரமப்பாகுபாட்டைக்    கடுமையாக    எதிர்த்து   ஒரு   பெருங்கிளர்ச்சியே
நடத்தினர். சாதி -  சமய -   வருண    வேறுபாடுகளுக்கு    அப்பாற்பட்ட  
தேசிய    அமைப்பான     தமிழ்நாடு      காங்கிரசின்     பணவுதவியைக்  
கொண்டு   ஐயர் குருகுலத்தை  நடத்தி  வந்தாராதலால், அவருடைய வைதிக  உணர்வு     தேசிய    விரோதச்    செயலாகக்    கருதப்பட்டது.    ஐயர்,
தம்மளவில்  சாதி  சமய -  வருண   வேறுபாட்டைக்   கடந்து   வாழ்க்கை 
நடத்தும்      உண்மைத்       தேசியவாதியாக     விளங்கினாரென்றாலும்,
குருகுலத்திலுள்ள    மாணவர்கள்    விஷயத்தில்    பெற்றோர்கள்   விருப்


1. "பாலபாரதி", செப்டம்பர், 1925