பக்கம் எண் :

126விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

பத்திற்கு    மதிப்பளிக்க    வேண்டமென்பதில்   பிடிவாதமாக   இருந்தார்.
காந்தியடிகள் தலையிட்டுச் சமரசம் செய்யுமளவுக்கு இந்தத் தகராறு பெரிதாக
வளர்ந்தது. அடிகளாரின் சமரசமும் பயன் தரவில்லை.

மகாத்மாவின் மத்தியஸ்தம்!

     வ.வே.சு.ஐயர், காசியில் பட்டுத் துணிக்கடை வைத்து வாணிபம் நடத்திக்
கொண்டிருந்த பா. ஆதிமூர்த்தி  என்ற தம்முடைய  நண்பருக்குக்  குருகுலத்
தகராறு பற்றி எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு:

     "மகாத்மா  காந்தி  இருதலைக்  கொள்ளி  எறும்புபோல்   அவஸ்தைப்
படுவதைக்  கண்டேன். நானும்  வைதீகர்களுக்கும் அவர்களது எதிரிகளுக்கும்
நடுவில்  இருப்பதால்  இருவருக்கும் நம்மிடத்தில் அபிமானமில்லை. ஆனால்,
தற்போது  சொல்ல  வேண்டிய வழி இவ்விரு வகுப்பினருக்கும் இடையேதான்
உள்ளது.

     "இது விஷயமாக நான் சொல்லக்கூடிய தெல்லாம் சொல்லியாகி விட்டது.
என்  தலைமை  ஸ்தானத்திலிருந்து நீங்கி பரத்துவாஜ ஆசிரமத் தலைமையை
வேறொருவரிடம்  கொடுத்து  இலக்கியத்துக்காகவும், அத்தியாத்ம  வளர்ச்சிக்
காகவும்   என்   நேரத்தைச்   செலவு  செய்வது  உசிதமென   யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.  முடிவு  பகிரங்கப்படுத்தும்  போது தெரியவரும். ஜாதீய
ஒற்றுமையை உண்டாக்குவது எவ்வளவோ கடினம்-சிதைப்பது மிக மிக எளிது.
அவ்வேலை ஸ்ரீ நாயுடுவால் துவக்கப்பட்டுள்ளது.

      "தமிழ்நாடு  தற்கொலை  செய்துகொண்டு  திரிகிறதே என்ற வருத்தமே
என்னைப்  பாதிக்கிறது.  தமிழுக்காகவும்  நாட்டுக்காகவும்   சன்னியாசிபோல்
வாழ்ந்தும்  என்மீது ஸ்ரீ நாயுடு போன்றார்க்கு ஏனோ இவ்வளவு க்ஷாத்திரம்."

      "எல்லாவற்றையும்  இயக்கிக்  கொண்டிருக்கிற  பராசக்திக்கு  எல்லாம்
தெரியும்.  அவளது ஆதேசப்படி நடக்க முயன்று வருகிறேன். ஆதலால் எது
வரினும் அச்சமில்லை. தமிழ்நாடு  ஈடேறும் நாள் ஒதுங்குகிறது  என்பதேதான்
என் வருத்தம்."1


1. "பாலபாரதி", செப்டம்பர், 1925