ஐந்தாவது கட்டம் -இந்திய விடுதலைப் போரின் இறுதிக் கட்டம்-மிக நீண்டதாகும். அது, 1919 தொடங்கி பாரதம் விடுதலை பெற்ற 1947ஆகஸ்டுப் பதினைந்து வரை மகாத்மா காந்தியடிகளின் ஒப்பற்ற தலைமையின் கீழ்- தொடர்ந்து முப்பதாண்டுக் காலம் -சாத்வீக முறையில் நடைபெற்ற அரசியல் புரட்சியாகும். இந்த நீண்ட காலத்தைக் 'காந்தி சகாப்தம்' என்றழைக்கலாம். பாளையக்காரர் இலக்கியங்கள் பாளையக்காரர் போர் நிகழ்ந்த காலத்திலும் அது முடிந்த பின்னரும், அந்தப் போரைப் பற்றியும் போரில் தலைமை தாங்கிய பாளையக்காரர் பற்றியும் கவிதை இலக்கியங்கள் தோன்றின ; இன்னமும் தோன்றிக் கொண்டிருக்கின்றன . பாளையக்காரர் போர் பற்றிய இலக்கியங்களிலே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றியவையே அதிகமாகும். இது ஒன்றே அம்மாவீரன் பாரதத்தை விடுவிக்கப் போர் நடத்தியவர்களிலே முதல்வனாவான் - முன்னோடியுமாவான்என்பதற்குச் சான்றாகும். வீரபாண்டியன் தலைமை தாங்கி நடத்திய பாஞ்சாலங்குறிச்சிப் போர் பற்றி இயற்றப்பெற்ற கவிதை இலக்கியங்களிலே சில வருமாறு: கலியுகப் பெருங்காவியம் கட்டபொம்மன் சண்டைக் கும்மி பாஞ்சைக் கோவை வீரபாண்டியன் அநுராக மாலை இராமநாதபுரம் பேட்டி விருத்தம் இராமநாதபுரம் பேட்டிக் கும்மி கட்டபொம்மன் கதைப்பாடல் வீரபாண்டியம் இன்னும் எண்ணற்ற கவிதை இலக்கியங்கள் வீரபாண்டியக் கட்டபொம்மன் மீது இயற்றப்பட்டன என்றாலும்,அவை நாடு முழுவதிலும் அறிமுகமாகவில்லை. பாஞ்சப் போர் பற்றி ஆயிரமாயிரம் தனிப்பாடல்களும் தோன்றின. அவை நாடோடிப் பாடல்களாக இன்றுவரை பாண்டி மண்டிலத்திலே பாடப்பட்டு வருகின்றன .கட்டபொம்மனைப் பற்றியும்அவன் தலைமையில் நடந்த பாஞ்சப் போர் பற்றியும் பழமொழிகள் பலவும் வழங்கி வருகின்றன. தேசியக்கவி பாரதியார் பாடியுள்ள 'மறவன் பாட்டு' பாஞ்சப் போரில் ஈடுபட்டதன் காரணமாகப் பரங்கியர் ஆட்சியால் துன்புறுத்தப் |