அமைத்ததே, ஆங்கிலமொழியின் ஆதிக்கத்தை அகற்றி, பிரதேச
மொழிகளை வளர்ப்பதற்காகத்தான். நாகபுரி காங்கிரஸ் மகாசபையில் காந்தியடிகளின் ஒத்துழையாமைத்
திட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், நாட்டின் பல மாநிலங்களிலே தேசியக்
கல்வித்திட்டம், தேசபக்தர்களால் நடைமுறைக்குக் கொண்டுவரப் பெற்றது.
வடபுலத்தில் பல பகுதிகளிலே தேசீய வித்தியாபீடங்கள் நிறுவப்பெற்றுன.
இந்த வித்யா, பீடங்களிலெல்லாம் அரசாங்கக் கல்விமுறை பகிஷ்கரிக்
கப்பட்டது. அதற்கு மாற்றாக, க ாந்தியடிகள் தந்த தேசியக் கல்வித் திட்டம்
செயல்படுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலே எண்ணற்ற தேசியப்
பள்ளிகளும் தேசியக் கல்லூரிகளும் தோன்றின. இப்படியாக, காந்தி சகாப்தம்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல், அவர் தம் மொழியான
ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் தோன்றியது.
பிரதேச மொழிகளிடையே தொடர்பு காண ஒரு பொது மொழி தேவைப்
படுவதை காந்தியடிகள் நன்கு உணர்ந்தார். அந்த இடத்திலே ஆங்கிலம்
நிலைத்திருக்க முடியாதென்பதையும் அவர் அறிந்தார். அதனால், தேவநாகரி
லிபியில் எழுதப்படும் இந்தியோ, அரபு லிபியில் எழுதப்படும் இந்து
ஸ்தானியோதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்கும் என்று கூறினார்.
இதனை, காங்கிரஸ் மகாசபையும் ஏற்றது. காங்கிரஸ் மகாசபை பிரதேச
மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதனைத் தன் கொள்கையாகக் கொண்டதன்
விளைவாக, மக்களிடையே தாய் மொழிப்பற்று வலுப்பட்டது.
படித்தவர்களிடையே ஆங்கில மோகம் பெருமளவுக்குக் குறையலானது.
தமிழ், தமிழன் என்ற இன உணர்வு ' இந்தியன் ' என்ற தேசிய
உணர்வுக்கு எதிரானதல்ல என்றஉண்மை அன்றைய தேசியவாதிகளால் ஏற்றுக்
கொள்ளப்பட்டது. தாய்மொழிப் பற்றுவேறு; தாய்நாட்டுப் பற்று வேறு-
என்பதிலுள்ள அறியாமை உணரப்பட்டது. மொழி வழிப்பட்ட இனஉணர்ச்சியும்
சமுதாய வழிப்பட்ட தேசிய உணர்ச்சியும் ஒன்றை ஒன்று தழுவி நிற்க முடியும்
-என்பதனை மறுப்போர், தாய்மொழிப்பற்றை ' மொழி வெறி ' என்று
வருணிப்போர் அன்றைய காங்கிரஸ் முகாமிலே இல்லை. இதற்கு மாறாக,
பிரதேச மொழிப் பற்றும், அதன் வழிப்பட்ட இன உணர்ச்சியும்