கிறித்துவம், சமணம், பௌத்தம் என்ற சமயங்கள் அங்கங்களாக
அமைந்திருக்கவில்லை. இறை நினைவோடு இந்தியாவின் இயற்கை அமைப்பை
ஆழ்ந்து கவனித்த அடிகளார், அது, மொழிவாரிப் பிரதேசங்களை
அங்கங்களாகக் கொண்ட ஒரு உப கண்டமாக அமைந்திருப்பதை அறிந்தார்.
மதங்கள் எலாம் மாய்ந்து, பாரத மக்கள் எலாம் ஒரே குலமாக வாழுங்காலம்
தோன்றினாலும் தோன்றலாம். ஆனால், மொழிகளும் மொழிவழிப்பட்ட
இனங்களும் மாய்ந்து இந்திய சமுதாயம் ஒரு மொழி மட்டுமே வழங்கும்
ஒற்றைக் குடும்பமாக அமைவது என்றைக்குமே சாத்தியமில்லை என்பதனைத்
தெள்ளத் தெளிய அடிகள் உணர்ந்தார். காந்தியடிகள் சுதந்திர இந்தியாவின் சமயச்சார்பற்ற அரசு
அமைப்பதனையே கொள்கையாகக் கொண்டு காங்கிரசின் தலைமையை
ஏற்றார். சமயச் சார்பற்ற சுதந்திர இந்தியா திறம்பட இயங்க வேண்டுமானால்,
மொழிவழிப்பட்ட இன வேற்றுமையை - இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக்
கேற்ற வகையில் - ஏற்கவேண்டியிருக்கு மென்பதனையும் அறிந்து
வைத்திருந்தார். இந்தக் கண்னோட்டத்துடன்தான் பிரதேச மொழிகளின்
வளர்ச்சிக்குப் பாடுபடுவதனைத் தன் கொள்கையாக ஏற்கும்படி காங்கிரசைத்
தூண்டினார்.
வியப்பென்னவென்றால், காந்தி சகாப்தம் தோன்றிய பின்னரும்
தமிழகத்திலே தேசியக் கல்விக்காக தமிழ் வித்யாபீடம் ஒன்று கூடத் தோன்ற
வில்லை என்பதுதான். பிரதேச மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கும் தேசியக்
கல்வித் திட்டம் தமிழகத்துத் தேசபக்தர்களால் சரியானபடி செயல்படுத்த
வில்லை. ஆயினும், கொள்கை அளவிலேனும் காங்கிரசின் தேசியக் கல்வித்
திட்டம் தமிழகத்துக் காங்கிரஸ்காரர் களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
விடுதலைப் போர் தோன்றுவதற்கு முன்பு, ஆங்கிலமொழியில் கல்வி
கற்றவர்கள் அன்னியருக்கு அடிமைப்பட்டிருந்த கொடுமையை தலைவர்
ராஜாஜி பின்வருமாறு வருணிக்கிறார்.
"அந்நிய ஆக்கிரமிப்பைக் கண்டு மக்களின் உள்ளம் கொதிப்
படைவதற்குப் பதிலாக ஆங்கிலேயரை குரு ஸ்தானத்தில் வைத்து மதித்துப்
போற்றி அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்ல முயலும் ஆங்கிலம்
படித்த கூட்டம் ஒன்று நாட்டில் முளைத்து வளர்ந்தது."1
1. கலைக் களஞ்சியம் (தமிழ்), பகுதி -1, பக்-499