நிலைகுலைந்து நெஞ்சங் குமுறினார். அந்தக் குமுறலை அவருடைய வாக்காலேயே காண்போம்: "தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூட்டத்தார் நிகழ்ச்சி முறைகளைத் தமிழிலேயே நடத்தல் வேண்டும்; மாறாக நடப்பாராயின், நாட்டார் அவரைத் தமிழ் வழியில் நடத்த முயலல் வேண்டும்.? "தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கூட்டத்தார் காங்கிரஸ் தீர்மானப்படி ஆங்காங்கே நாட்டுக்கல்லூரி அமைக்கப் கடமைப்பட்டிருக்கின்றனர். முதலாவது சென்னையில் இரண்டு தமிழ்ச் சாலைகள் அமைக்குமாறு அவரை வேண்டுகிறோம். ஒன்றில் தமிழ்மொழி போதிக்கப்படல் வேண்டும்; மற்றொன்றில் மேல்நாட்டுப்பொருள் நூல், பூத பௌதிக நூல் முதலியன தமிழ் நாட்டவர்க்குப் பயன்படும் பொருட்டு, அவைகளைத் தமிழில் மொழி பெயர்க்கப் போதிக்கப்படல் வேண்டும்."1 'நாட்டுக் கல்லூரி என்று திரு.வி.க.குறிப்பிடுவது வடக்கில் 'வித்யாபீடம்' என்ற பெயரில் அழைக்கப்பெற்றாற்போன்ற தாய் மொழிக்கு முதலிடம் தந்து கல்வி பயிற்றுவிக்கும் கல்விச் சாலையேயாம். திலகர் காலத்திலேயே பிரதேச மொழி வளர்ச்சிக்கான பணியிலே விடுதலைப் பாசறையினர் ஈடுபட்டனர் என்றாலும் காந்தியடிகள் காலத்தில் தாய்மொழிப்பற்றானது ஆங்கில ஆதிக்க எதிர்ப்பியக்கமாகவே உருவெடுத்தது. ஆம் ; ஆங்கிலேயரின் அரசியல் ஆதிக்கத்தை மட்டுமன்றி அவர்தம் மொழியான ஆங்கிலத்தின் ஆதிக்கத் திலிருந்தும் நம்நாடு விடுதலை பெறுவதனையே உண்மையான விடுதலையாகக் காந்தியடிகள் கருதினார். "சுதேசியம் என்பது வெறும் பண்டங்களை மட்டும் குறிப்பதன்று; சொந்த மொழியையும் குறிப்பதாகும்" என்று விளக்கந் தந்தார் காந்தியடிகள். சொந்த மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே சுதந்திரம் பெற முடியும் என்றும் அறிவுரை புகன்றார். தங்கள் நாட்டின் பொருள்களைவிற்கும் சந்தையாக இந்தியாவை ஆங்கிலேயர் பயன்படுத்துவதைத் தவிர்க்க அன்னிய நாட்டுப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று போதித்தார் காந்தியடிகள். அத்தகைய பகிஷ்காரத்தைச் சுதந்திரம் பெறுவதற்கான ஒரு சாத்வீகப் போர் முறையாகவும் கருதினார். அது போலவே, அன்னிய மொழியின் மோகத்திலிருந்து 1. 'தமிழ்ச் சோலை' - முதற்பகுதி; பக்.10 |