பக்கம் எண் :

148விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

விளங்காமலிராது. இந்தி தெரியாத தமிழர்களுக்காவும், தெலுங்கர்களுக்காகவும்,
அவர்களுடைய  மொழியில்  விளக்கமாக  எடுத்துச்  சொல்வதற்குத்  தமிழ்-
தெலுங்கு மொழி பெயர்ப்பாளர் இருந்தனர்."1

     அடிகளார்,  ஜனநாயகத்தில்  தாம்  கொண்டிருந்த அழுத்தமான பற்று
காரணமாக,  தாம்     வெளியிடும்     ஒவ்வொரு   கருத்தும்    மக்களில்
ஒவ்வொருவருடைய   செவிகளுக்கும்  போய்ச்  சேரவேண்டும்  என்பதிலே
எல்லையற்ற   அக்கறை  கொண்டிருந்தார்.  அந்த  அக்கறையாலும்  தமிழ்
உள்ளிட்ட பிரதேச மொழிகள் வளர்ச்சி பெற்றன-வாழ்வும் பெற்றன.

     இதுகாறும்  காந்தி   சகாப்தத்தில்  இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு
ஆதரவாகவும் ஆங்கிலஆதிக்கத்திற்கு எதிராகவும் உருவாகிய சூழ்நிலையை அறிந்தோம்.   இனி,   காந்தி   சகாப்தத்திலே   ஒவ்வொரு   துறையிலும்
பிரதேசமொழி - அதாவது   தமிழகத்திலே   தமிழ்மொழி  வளர்ச்சியினைத்
துறைதுறையாக ஆராய்வோம்.


1. காந்தி நூல்கள் தொகுப்பு-1; பக்.135.