பக்கம் எண் :

162விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     "பண்டிதை    அசலாம்பிகை  அம்மையார்  தமிழ்  அமிழ்தை  யான்
இளைஞானயிருந்தபோது   பன்முறை  பருகினேன். திருப்பாதிரிப்  புலியூரில்
அத்தமிழ்த்தாயை நேரிற் கண்டு உறவாடுஞ் சேயானேன்.”

     "தென்னாற்காடு   ஜில்லா   மூன்றாவது   அரசியல்  மாநாடு;  இடம்:
திருப்பாதிரிப்புலியூர்;   (15,16-10-1921),  இம்மாநாடு   மிக   நெருக்கடியான
காலத்தில்  கூடியது.  மலையாளத்தில்  குழப்பம்; சென்னையில் ஒரு பெருந்
தொழிலாளர்  வேலைநிறுத்தம்;  நாட்டில் ஒத்துழையாமைப்போர்; எங்கணும்
அடக்குமுறை."

     "பண்டிதையார் தமது முதுமையைக் கருதாமலும், கால  நெருக்கடியைப்
பொருட்படுத்தாமலும்    மகாநாட்டில்   கலந்து    கொண்டது   அவர்தம்
அஞ்சாமையைப் புலப்படுத்தியது."2

     பண்டிதையார்,  திருப்பாதிரிப்புலியூர்  வாழ்ந்தவர்.  ஆனால்,  தேசத்
்தொண்டு, தெய்வத் தொண்டு, தமிழ்த் தொண்டு காரணமாகத் தம் வாழ்நாள்
முழுவதும்  நாடு  சுற்றிப்  பாடுபட்டார். இவர்  எழுதிய  'திலகர் புராணம்'-
'காந்தி புராணம்'    இரண்டுக்குமே   திரு.வி.க.முன்னுரை  வழங்கியுள்ளார்.
இவ்வம்மையார்,  வைதிக அந்தணர்  குடியில்  பிறந்திருந்தும்,  சாதி-மதம்-
குலம்- வருணம்  ஆகிய   வேறுபாடுகளை  வெறுத்துப்    புரட்சி  செய்த
வள்ளற் பெருமான் மீதும் புராணம் பாடியுள்ளார்.

     வீரவிளக்கு    வ.வே.சு ஐயர்.    பண்டிதையார்    பாடிய    காந்தி
புராணத்திற்குத்   தமது  'பால பாரதி'  இதழில் மதிப்புரை எழுதினார். அது
வருமாறு:

     "பண்டிதை   ஸ்ரீமதி   அசலாம்பிகை   அம்மையார் அருளிய  காந்தி
புராணத்திற்கு  நல்வரவு கூறுகிறோம். ஆத்ம சக்தியின் வெற்றி முரசு  மிருக
பலத்தைத்   திடுக்கிடச் செய்யும் இந்த நவயுகத்திற்கு நாயகனான  மஹாத்மா
காந்தியடிகளின்   சரிதையைப்   புராண   வாயிலாக     சாசுவதப்படுத்திய
அம்மையாருக்குத்    தமிழ்நாடு   மிகவும்  நன்றி    செலுத்தக்   கடமைப்
பட்டிருக்கிறது.

     "இக்காவியத்தின்   நடையழகும்     விருத்தம்      அமைத்திருக்கும்
பொருத்தமும்,   ஆங்கில    மொழிகளையும்,  தமிழுக்கு    அன்னியமான
சொற்களையும்     வெகு      நயமாகக்     கவிகளில்     அமைத்திருக்


1. 'திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள்', பக்.346