திரேட், பாரதி பாடல்கள் அடங்கிய நூல்களைப் பறிமுதல் செய்ய ஆணை
பிறப்பித்தார். அந்த ஆணையை அமுல் நடத்த முயன்ற போலீசார்,
சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியாரின் மனைவியால் நடத்தப்பட்டு
வந்த பாரதி ஆசிரமத்தைச் சோதனையிட்டு, தேசியக் கவிகள் அடங்கிய
நூல்களைப் பறிமுதல் செய்தனர். அதே நேரத்தில், பாரதி நூல்கள்
அச்சடிக்கப்பட்ட இந்திப் பிரச்சார சபையின் அச்சகத்தையும், பாரதி
நூல்களை விற்றுவந்த "ஏ.என்.தண்டபாணி கம்பெனி" என்ற புத்தகக்
கடையையும் சோதனையிட்டு பாரதி பாடல் தொகுதிகளைப் பறிமுதல்
செய்தனர். மொத்தம் இரண்டாயிரம் பிரதிகள் போலிசாரால் கைப்பற்றப்
பட்டன. இந்த அடக்குமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்
அப்பீல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, பாரதியார் கவிதைகளிலே
ராஜத் துவேஷமான கருத்துக்கள் இல்லை என்று கூறி, பிரதம மாகாண
மாஜிஸ்திரேட்டின் ஆணையை உயர் நீதி மன்றம் ரத்துச் செய்தது.
போலீசாரும் தாம் கைப்பற்றிய பிரதிகளை உரியவர்களிடம்
ஒப்படைத்துவிட்டனர்.
சென்னை பிரதம மாகாண மாஜிஸ்திரேட்டின் உத்தரவையும்,
அதன்மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகளையும் கண்டிக்கும் வகையில்
நாவலர் சத்தியமூர்த்தி அவர்கள்,அப்போதைய சென்னை சட்டமன்றத்திலே
ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்தார். அந்தத் தீர்மனாத்தின் மீது
பேசியபோது அவர் தெரிவித்த கருத்து வருமாறு:-
"பாரதியாரின் பாடல்களிலே என்ன தவறு இருக்கிறது? தேசபக்தியைப்
போதிப்பது கூட குற்றமா? "பாரதி பாடல்கள் அடங்கிய நூல்களின்
பிரதிகளைப் போலீசார் பறிமுதல் செய்தது தமிழ் இலக்கியத்திற்கு அரசு
விடுத்த அறைகூவலாகும். அத்துடனன்றி, தமிழைத் தாய் மொழியாகக்
கொண்ட மக்களுக்கெல்லாம், விடுத்த அறைகூவலாகவும் நான் கருதுகிறேன்.
சிந்திக்கும் சுதந்திரத்தையும், தேசபக்தியையும் போற்றுவோருக்கெல்லாம்
விடுத்த அறைகூவலாகவும் நான் எண்ணுகின்றேன்.”
"பாரதி பாடல் புத்தகங்களை அரசு பறிமுதல் செய்து
விட்டது. அந்தப் பாடல்களை ஆயிரமாயிரம் மக்கள் மனப்