என்ற குஜராத்திப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழி
பெயர்ப்புப் பாடல் மூலப் பாடலினும் சுவை மிக்கதாகும். வாழ்வெல்லாம் பாட்டு மயம்!
விடுதலைப்போர் வலுத்திருந்த காலத்தில், தேசபக்தர்கள் ஒரு தனி
மதத்தவர்போல் தங்களைக் கருதிக் கொண்டனர். அதனால், தங்களுடைய
குடும்ப நிகழ்ச்சிகளிலேயும் தேசியப் பாடல்களுக்கே முதலிடம் தந்தனர்.
தேசபக்தர்களிலேயே தீவரவாதிகளின் வீட்டுக் கலியாணங்களிலே,
மாலை நேரத்தில் "தேசியக் கச்சேரி" நிகழும். அந்நாளில், தேசியப்
பாடல்களைப் பாடுவதிலே தனி ஆர்வங்காட்டிவந்த திரு.டி.கே.பட்டம்மாள்
இத்துறையில் முதலிடம் பெற்றார்.
இந்துக் கோயில்களின் பிரம்மோற்சவங்களிலே, சுவாமி ஊர்வலத்தின்
பின்னே, தேசபக்தர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு, தேசியக்
கொடிகளைக் கையிலேந்தி, தேசிய பஜனை நடத்திக் கொண்டு செல்வர்.
தேசபக்தர் ஒருவர் இறந்துபோனால், அவரது பிரேத ஊர்வலத்தின்
பின்னேயும் தேசிய பஜனைக் குழு செல்வதுண்டு.
சைவர் ஒருவர் உயிர்விடும் தருணத்திலே திருவாசகம் பாடுவதுபோல,
தேசபக்தர் ஒருவர் மரணமடையுங்கால் தேசியப் பாடலைப் பாடும்
வழக்கமும் இருந்தது. தேசபக்தர் வ.உ.சிதம்பரனார் ஆவி நீத்தபோது,
"என்று தணியுமெங்கள் சுதந்திர தாகம்"என்ற பாரதியாரின் தேசியப் பாடல்
பாடப்பட்டதே இதற்குச் சான்று.
அந்தக் காலத்திலே, அரசியல் கூட்டங்களிலேயும் தேசியப்
பாடல் பாடப்படுவது வழக்கம். நன்கு பாடத் தெரிந்த ஒருவரோ,
ஒருவர்பின் ஒருவராகப் பலரோ, கேட்போரின் உள்ளங்களிலே
உரிமை உணர்ச்சியை எழுப்புகின்றவண்ணம் மிகுந்த உணர்ச்சி
யுடன் தேசியப் பாடல்களைப் பாடச் செய்வதுண்டு. காந்தியடிகள்
பிறந்தநாள், திலகர் நினைவுநாள், பாரதியார் நினைவுநாள் ஆகிய
தேசியத் திருநாட்களிலே யார் பெயரால் விழா நடைபெறுகின்றதோ,
அவரைப் பற்றி இயற்றப்பட்டுள்ள பாடல்கள் பாடப்படும். இது,
ஒரு சடங்கு போலவே நிகழும். கே.பி.சுந்தராம்பாள், டி.கே.பட்டம்