மாள், ஆரியகான கே.எஸ். அனந்தநாராயண ஐயர், சங்கு
சுப்பிரமணியம் ஆகிய நன்கு அறிமுகமான பாடகர்கள் பாடுவார்கள். அன்பர் சங்கு சுப்பிரமணியம், பாரதியாரின் பாடல்களைத் தனித்
திறமையோடு பாடி, கேட்போரை ஆவேசங்கொள்ளச் செய்வார்.
பாரதியாரின் "ஊழிக்கூத்து”ப் பாடலை அவர் ஒருமுறை பாடிக்கேட்டோர்
தம் வாழ்நாள் முழுவதும் அதனை நெஞ்சில் நிறுத்துவர்.
ரெயில்களில் டிக்கட்டின்றிப் பயணஞ் செய்து, வீடு வீடாகச் சென்று
பாடிப் பிச்சையெடுப்போரிலேயும் பலர், அந்நாளில் தேசியப் பாடல்களைப்
பாடி, மக்களுடைய அன்பைப் பெற்றனர்.
தமிழகமெங்கனும் சென்று, ஊர் ஊராகச் சுற்றியலைந்து தேசியப்
பாடல்களைப் பாடி, நாட்டில் தேசபக்தியை வளர்த்த தேசிய பஜனைக்
கோஷ்டிகளும் உண்டு. தியாகி சுப்பிரமணிய சிவா, "தேசபக்த சமாஜம்"
என்ற பெயரில் தொண்டர் படை ஒன்றை அமைத்திருந்தார். இந்தப்
படையினர் தமிழ் நாடெங்கும் தொடர்ந்து ஏழு மாத காலம் சுற்றுலாச்
செய்து, பாரதியாரின் தேசியப் பாடல்களைப் பரப்பினர். 'கல்கி'
டி.சதாசிவம், மதுரை சிதம்பர பாரதி, சோழவந்தான் ரா.சீனிவாச வரதன்,
தியாகராச சிவம், நெல்லை ந.சோமயாசுலு ஆகியோர் தேசபக்த சமாஜப்
படையைச் சேர்ந்தவர்களாவர்.
"பாரதி பஜனை சமாஜம்" ஒன்றும் 1933ல் திரு. சீனிவாசவரதனால்
மதுரை மாநகரில் ஆரம்பிக்கப்பட்டது. நாள்தோறும் காலையிலும்
மாலையிலும் தேசிய கீதங்களைப் பாடிக் கொண்டு வீதிவலம் வருவது
இந்த சமாஜத்தின் வேலையாகும். மார்கழித்திங்களிலே சைவர்கள்,
மணிவாசகர் தந்த திருவெம்பாவையையும்; வைணவர்கள், ஆண்டாள்
அருளிய திருப்பாவையையும் அதிகாலையிலே பாடிப் பஜனை செய்த
வண்ணம் வீதிவலம் வரக் காண்கின்றோம். அதுபோல, பாரதியார் பாடிய
"பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி" என்ற பாடலை மார்கழித் திங்களிலே
நாள்தோறும் அதிகாலையில் பாடிக்கொண்டு தேசியவாதிகள் வீதிவலம்
வருவதுண்டு.
சிறைவாழ்விலேயும் தேசபக்தர்கள் தமிழிசை பாடி வாழ்ந்த
தனைமுன்பே அறிந்தோம். ஆம்; காலையில் சிறையிலுள்ள அறை
களிலிருந்து வெளிவரும் போதும் மாலையில் அறைக்குள் போகு
முன்னரும் அரசியல் கைதிகளெல்லாம் ஒருங்குகூடி, பிரார்த்தனைப்