பாடல்களைப் பாடி, தெய்வத்தை வழிபடுவார்கள். வீடுபேறு கோரியல்ல;
நாட்டிற்கு விடுதலை கோரி! தமிழிசைக் கிளர்ச்சி
தமிழகத்தில் தமிழிசைக்கே முதலிடம் இருக்கவேண்டும் என்பது
அந்நாளைய தேசியவாதிகள் பலருடைய கொள்கையாக இருந்தது.
தமிழகத்திலே இசையரங்குகளில் சம்ஸ்கிருதமும் தெலுங்கும் தமிழை
விடவும் ஏற்றம் பெற்றிருப்பதனை அவர்கள் வெறுத்தனர். அதனை
எதிர்த்துக் கிளர்ச்சியும் தொடங்கினர். ஆம்; இற்றைக்குச் சரியாக அரை
நூற்றாண்டுக்கு முன்பே தமிழிசைக் கிளர்ச்சி தொடங்கியது. தொடக்கி
வைத்த பெருமை தேசியவாதிகளுக்கே முதலுரிமை. அவர்களிலும்
தேசியக்கவி பாரதியாரே முன்னோடியாக விளங்கினார்.
"ரஸ ஞான மில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர்
சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக்
காட்டுகிறார்கள். இக்காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர்
ஸங்கீதத்திற்கு நவரஸங்களே உயிர் என்பதனை அறியாதவர்” 2
"முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர்
முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன்
பாடுவாரே 'முதல்தர வித்துவான்கள்'. இந்தக் கீர்த்தனங்கள் எல்லாம்
சம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே
முக்காலே மும்மாகாணி 'வித்வான்'களுக்கு இந்தக் கீர்த்தனங்களின்
அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும்
,விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு 'ரஸம்' தெரிய
நியாயம் இல்லை."
"நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக்கொண்டே வருகிறேன்.
பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம்' என்று
ஆரம்பஞ் செய்கிறார். 'ராம நீ ஸமான மெவரு' 'மரியாத காதுரா'
'வரமுலொஸகி'... ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.
"எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்துக்குப் போ, எந்த
'வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்