பக்கம் எண் :

176விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

மூர்த்தியாரின் முழக்கம்

     நாவலர் சத்தியமூர்த்தி மிகச் சிறந்த  சங்கீத ரசிகர். சம்ஸ்கிருதத்திலே
பெரும் புலமை பெற்றவர். அப்படி இருந்தும், தமிழ் நாட்டு  இசையரங்கிலே
சம்ஸ்கிருதமும் தெலுங்கும் ஆதிக்கம் செலுத்துவதனை அவரும் வெறுத்தார்.
வாய்ப்பு  நேர்ந்தபோதெல்லாம்  சங்கீத வித்வான்கள் அடங்கிய 'சென்னை
மியூஸிக்  அகாடமி'யின்  ஆண்டுவிழா மன்றங்களிலேயே தமது வெறுப்பை
'சங்கீத     விஷயம்'    என்னும்   கட்டுரையில்.   மிகவும்   துணிவுடன்
வெளிப்படுத்தினார்.   தமிழகத்தில்   தமிழிசைக்கே   முதலிடம்   இருக்க
வேண்டுமென்றும் வற்புறுத்தினார்.

     "தமிழ்     நாட்டுத்   தமிழருக்கு   பாட்டுக்களைத்   தமிழிலேயே
பாடவேண்டும்."

     "இப்பொழுது   நான்   பார்த்த  அளவில் நம்முடைய கச்சேரிகளில்
பாட்டுகள்   அநேகமாக,   ஆரம்பம்   முதல்   முடிவுவரையில்  பகவத்
ஸ்தோத்திரமாகவும்   பாட்டின்   பாஷை   நமக்குப் புரியாததாகவும், சில
சமயங்களில் பாடகர்களுக்கே புரியாததாகவும்... இருக்கின்றன.”

     "தமிழ்   நாட்டில்   பாடகர்கள்   கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்களை
அதிகமாகப் பாடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.”

     "உண்மையான      சங்கீதத்தின்      அழகு,     படித்தவர்களும்
படிக்காதவர்களும்   சங்கீத   ஞானம்   உள்ளவர்களும் அனுபவிக்கும்படி
இருக்கவேண்டும்.”

     "சங்கீத   வித்வான்களின் உண்மையான உயர்ந்த நோக்கம், தங்கள்
சங்கீதத்தை,    பல்லாயிரக்    கணக்கான    ஜனங்கள்     அனுபவிக்க
வேண்டுமென்பதுதான்."1

     இது,     பாரதியார்   துவக்கிவைத்த   தமிழிசைக்    கிளர்ச்சிக்கு
ஆதரவுகாட்டும்   வகையிலே   நாவலர்  சத்தியமூர்த்தி ஐயர் தெரிவித்த
கருத்தாகும். சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய பிற மொழிப் பாடல்களையே
பாடுவதில்   பிடிவாதம்   காட்டுவோரின்   காதுகள்  கேட்கும்படி ஐயர்
கண்டனக்குரல் கொடுத்திருக்கிறார்.  

      பாரதியாரும்   நாவலர்  சத்தியமூர்த்தியும்    துவக்கி    வைத்த
தமிழிசைக்   கிளர்ச்சியின்  தொடர்ச்சிதான் 1941ல்  தோன்றிய  தமிழிசை


1.  "சத்தியமூர்த்தி பேசுகிறார்"  என்ற நூலில். "சங்கீதமும் லௌகீகமும்"
என்ற தலைப்பின் கீழுள்ளவை.