இயக்கம், இராசா சர். அண்ணாமலை செட்டியாரும், அவரது அருமை மகன்
இராசா சர். முத்தைய செட்டியாரும் முன்னின்று தொடங்கிய அந்த
இயக்கத்திலே ராஜாஜி, 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். தெ.பொ.
மீனாட்சிசுந்தரனார் முதலிய தேசியவாதிகளும் முன்னணியில் நின்றனர்
என்பது குறிப்பிடத் தக்கதாகும். புலவர்களுக்கு விழா
தமிழகத்திலே வழிவழி தோன்றி இசைத் தமிழை - இலக்கியச்
செல்வத்தை வளர்த்து வந்த கவிஞர்களுக்கு விழாக்கொண்டாடவும் முதன்
முதலில் தேசியவாதிகளே முனைந்தனர். தமிழ்க் கவிஞர்களுக்கு விழாக்
கொண்டாடுமாறு பாரதி விடுத்த வேண்டுகோள் வருமாறு:
"மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலைச் செம்மையாக்க வேண்டும்.
இப்போது மிகவும் ஏழை நிலைமையில் இருக்கிறது. திருவெழுந்தூரிலும்,
கரூரிலும் ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும். ஜன்ம தினங்கள்
நிச்சயப்பட வழியில்லை. ஆதலால் ஸரஸ்வதி பூஜைக்கு முன்பு அல்லது
பின்பு குறிப்பிட்டதொரு தினத்தில் இந்த மகான்களின் ஞாபகத்தைக்
கொண்டாடுதல் பொருத்தமுடைய செய்கையாகும். நவராத்திரி உத்ஸவங்கள்
நமக்குள் வழக்கமாக உள்ளதால், அந்த ஸமயத்தை ஒட்டி நமது மகா
கவிகளுக்குத் திருவிழாக் கொண்டாடுதல் ஸு லபமாக இருக்கும்”
"பண்டித ஸபைகளையும், பொதுஜன ஆரவாரங்களையும்
கோலாஹலமாக நடத்தி எல்லா வர்ணத்தாரும் எல்லா மதஸ்தரும்
சேர்ந்தால், சந்தோஷமும் அறிவுப் பயனும் உள்ள மாண்பும் பெற
இடமுண்டாகும். மத பேதங்கள் பாராட்ட இடமில்லாத திருவிழாக்கள் தமிழ்
நாட்டில் எவ்வளவு அவசியமென்பதை ஒவ்வொரு அறிவாளியும் எளிதாக
ஊகித்துக் கொள்ளலாம்."1
பாரதி கண்ட இந்தக் கனவை நனவாக்கத் தேசியவாதிகளிலே
பலர் பிற்காலத்தில் முயன்றுள்ளனர். தேசபக்தி நிறைந்த குடும்பத்தில்
தோன்றி, தனி நபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச்
சிறைசென்ற டாக்டர். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், புலவர் பெருமக்கள்
1. பாரதி நூல்கள் - கட்டுரை;