பலருடைய துணைகொண்டு சிந்தாதிரிப்பேட்டையிலே ஆண்டுதோறும்
"பத்துப்பாட்டு மாநாடு", "எட்டுத்தொகை மாநாடு" என்று சங்க
இலக்கியங்கள் பெயரால் விழாக்கள் நடத்தியுள்ளனர். திரு.வி.கலியாணசுந்தரனாரும் டாக்டர். தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரும்
சேர்ந்து, கவிஞர்களையும் அவர்கள் இயற்றியருளிய கவிதை
இலக்கியங்களையும் மக்கள் போற்றும்படிச் செய்யப் பாடுபடுவதற்காக,
“சென்னை தமிழ்ச் சங்கத்"தைத் தோற்றுவித்தனர்.
திரு.சா.கணேசன் உள்பட தேசியவாதிகள் பலர் ஒன்று கூடி, 1938ல்
காரைக்குடியிலே "கம்பன் கழகம்" கண்டு, அதன் சார்பில் ஆண்டுதோறும்
"கம்பன் விழா" நடத்தி வருகின்றனர்.
கவிமணியின் தேசியம்!
கவிதைத் தமிழ் வளர்த்த தென்பாண்டித் தேசியவாதிகள்
பட்டியலிலே நாஞ்சில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள்
சிறப்பிடம் பெறக்கூடியவராவார். விடுதலைப் போராட்டம்
சமஸ்தானங்களிலே பரவவில்லை. பரவக்கூடாதென்பதும் காந்தியடிகளின்
கொள்கையாக இருந்தது. அதனால், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு
பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த கவிமணியவர்கள்
விடுதலைப்போரில் நேரடியாகக் கலக்கவோ, களம் பாடவோ
வாய்ப்பற்றவரானார். ஆனால், கட்டபொம்மன், காந்தியடிகள் ஆகிய
தளபதிகளைப் புகழ்ந்தும் தேசிய நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தும் கவிதைகள்
பல புனைந்துள்ளார்.
தேசியக்கவி பாரதியாரைப் புகழ்ந்து அவர் பாடியுள்ள
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா" என்ற பாடல், அவருக்கிருந்த
தேசியப்பற்றுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்நாளில் அரசியல் கட்சிகள் ஊர்வலம் நடத்தினால், அங்கே
இசை முழக்கம் எழுவதில்லை. ஊர்வலத்தினர் தம் கொள்கைகளை-
கோரிக்கைகளைப் பொதுமக்களுக்கு உணர்த்த கோஷங்கள்
மட்டுமே எழுப்பிச் செல்லக் காண்கின்றோம். அந்நாளில், விடுதலைப்
போராட்ட வீரர்கள் நடத்திய ஊர்வலங்களிலே இலட்சிய
கீதங்கள் பாடப்படும். பெரும்பாலும் பாரதியார் பாடல்களே
பாடப்படும். அவற்றிலும் குறிப்பாக, 'ஜெயபேரிகை
1. "பாரதி நூல்கள்" கட்டுரை; பக்.403.