"பாரத ஜனங்களுக்குப் பட்டினி நீங்கி உணவும், அறிவின்மை போய்
அறிவும், பலமும், வீரியமும், செல்வமும், செழிப்பும், ஸ்வதந்திரமும்
கிடைக்கவேண்டும். இதற்கு பாரத ஜனங்களே முயற்சி செய்யவேண்டும்.
பிறர் துணையை எதிர்பார்க்கலாகாது' என்கிறார். இதன் பொருட்டு,
ஆங்கிலேயர்களை அடித்து, இம்சித்துத் துரத்தவேண்டுமென்கிறாரா?
இல்லை. ராஜாங்கத்தாரின் சட்டத்துக்கு விரோதம் செய்ய
வேண்டுமென்கிறாரா? - இல்லை... சமாதானமாகவும் சட்டத்திற்குவுட்பட்டும்
இப்போதுள்ள ஆட்சி முறையை எதிர்த்துச் செம்மைப்படுத்த
வேண்டுமென்று சொல்கிறார். இவருடையவழக்கை ஒருவரால் அடக்க
முடியுமா? இவருடைய கூட்டத்தை ஹதம் செய்ய வல்லவர்கள் யார்?"1 பாரதியாரின் உரை நடையிலே வடசொற்கள் கலந்திருக்கின்றன.
ஆனால், உரைநடை மணிப்பிரவாளமன்று. பிறமொழிச் சொற்கள் கலவாமல்
அவர் எழுதியுள்ள உரைநடைப் பகுதிகளும் அவருடைய நூல்களில்
காணக்கிடக்கின்றன. எழுத எடுத்துக் கொண்ட பொருள், தமது எழுத்து
போய் சேரக்கூடிய இடம் ஆகியவற்றை நினைவில் கொண்டு அவர்
தம்முடைய நடையை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
பாரதியார், வ.வே.சு.ஐயர் ஆகியோருடைய உரைநடையிலே
வடசொற்கள் மிகுதியாகக் கலந்திருப்பதற்கு அவர்களுக்கு வடமொழியிலிருந்த
புலமையும் ஒரு காரணம் எனலாம்.
இணைப்புப் பாலங்கள்
இருபதாம் நூற்றாண்டின் முதல்பத்தாண்டு காலத்தில் தமிழகத்திலே
ஈடு இணையற்ற தேசியத்தலைவராக விளங்கினார் வ.உ.சிதம்பரனார்.
அவருடைய உரைநடையையும் பார்ப்போம்:
"நாம் அடைய விரும்பும் நமது உரிமைகளில் எதை
யேனும் அரசாங்கத்தார் நமக்குத் தருவதாயிருந்தால், அதற்காக
நாம் அவர்க்கு வந்தனம் கூறி, அவரோடு உடன்பட்டு உழைத்
தலும், எதையேனும் அவர் நமக்குத் தர மறுப்பின் அது
விஷயத்தில் நாம் அவரோடு உடன்படாது மாறுபட்டிருத்தலும்
வேண்டுமென்றே நாம் (திலகர் குழுவினர்) விரும்புகிறோம்.