பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 189

     இச்செயல்    தமக்குரியவற்றைத்   தந்தபோது  உவந்தும் தராதபோது
வெகுண்டும்   நிற்கும்   காளையர்   செயல்போன்றது.   சுருங்கக்  கூறின்
ஒத்துழைத்தலும்,  ஒத்துழையாமையும் ஏககாலத்தில் நிகழ வேண்டுமென்பதே
நமது அவா."1

     திரு.வி.கலியாணசுந்தரனாரும்    வ.உ.சிதம்பரனாரும்     தூய  தமிழ்
விரும்புவோருக்கும்   பழகு   தமிழிலேயே  கட்டுப்பட்டுக் கிடந்தோருக்கும்
இடையிலே - அவ்விரு  தரப்பாரையும் பிணைக்கும் பாலம் போல - இருந்து
வந்தனர்.

      தமிழ்   வளர்த்த   தேசியத்   தலைவர்களிலே   ஒருவரான தியாகி
சுப்பிரமணிய    சிவா    அவர்களின்   உரைநடையிலும்   ஒரு பகுதியைப்
பார்ப்போம்:

      "ஆஷாடபூதி    வேஷமிட்டுக்    காஷாயத்தைத்   தரித்துத் திரியும்
கள்ளர்களை  ஆதரிப்பதைக்  காட்டிலும் நாம் நமது கண்களால் பார்க்கின்ற
ஆயிரக்கணக்கான     நாராயணர்களை    (ஏழைகளை)ப்    பூஜிப்பதுதான்
உத்தமமான கைங்கர்யம்."

     "பணக்கொழுப்பினாலும் அதிகாரவர்க்கத்தினாலும் ஸ்தூலபலத்தினாலும்
தாங்கள்    இட்டதே     சட்டமென   நினைத்துப்  பொதுஜனங்களுடைய
அபிமானத்தையும் அபிப்பிராயத்தையும்  சிறிதும்  லட்சியம் செய்யாமல் நாய்
மனம்   சென்றபடி    யெல்லாம்    நடப்பவர்கள்   எவர்களோ, அவர்கள்
தேவர்   களாயினும்  சரியே, திருமூர்த்திகளாயினும் சரியே. அவர்களுடைய
ஆங்காரத்தலைகளை   அப்படியே   நசுக்கிவிட  வேண்டுமென்பதே எனது
ஜீவித காலத்தின் இலட்சியம்.

     "தமிழ்      நாட்டார்      என்னைக்    கைவிட்டனர்;    தனவந்தர்
என்னைக்   கைவிட்டனர்;   ஆங்கிலங்கற்றோர்   என்னைக்      கைவிட்
டனர்;   அரசாங்கத்தார்   என்னிடத்தில்   எப்படி   இருக்கிறார்கள்   என்
பது     எல்லோருக்கும்    தெரியும்.     தென்னாட்டைவிட்டே     போய்
விடலாமா   என்றுகூட   சில   சமயம்    எனக்குத்   தோன்றுகிறது.  என்
வியாதியோ   பெரிது.   ஈஸ்வரன்   என்னை  எப்படி  எல்லாம்    ஆட்டி
வைக்க        நினைத்திருக்கிறானோ      தெரியவில்லை.      எண்ணற்ற
ஏழைகள்   தினந்தோறும்      மரித்துக்     கொண்டே     யிருக்கின்றனர்.
இல்லாமை    என்னும்     இராக்ஷஸப்     பேயானது        இவர்களைத்


1. 'எனது அரசியல் பெருஞ்சொல்'