பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 191

     "பதறாதே,  மைந்த வருந்தாதே!  உன் சகோதரர்கள்,  என் மைந்தரில்
சிலரே,  இந்த  இரத்தக்  காயங்களை உண்டாக்கினார்கள். என்னைச் சிறை
வைத்திருக்கும்  அசுரனின்   தயவு   சம்பாதிக்க   வேண்டுமென்று   தன்
இஷ்டப்படி   செய்தது   பாதி.   மைந்த!   என்மேல்  ஓடும் இரத்தத்தைக்
காட்டிலும், என்   உள்ளத்தில்   பாயும்  இரத்தத்தை உள்ளபடி அறிந்தவர்
சிலரே.  அன்பார்ந்த  என்   மக்களிற்   பலர்  என்னை அசுரனிடமிருந்து
விடுவிப்பதற்காகப்படும் அரும்பாடுகளை அறிவேன். என் மைந்தரை அடித்த
அடி    ஒவ்வொன்றும்     என்மேல்  விழுந்துள்ளது. காயமும் அவ்வாறே
அவைகள் தான் இக்காயங்கள்."

     "ஐயோ! என் அருமை மக்களே, உங்களை நினைக்க நினைக்க துக்கம்
ஒரு  பக்கம்   என்  மனம்  அடைகிறது,  மகிழ்ச்சி ஒருபக்கம் அடைகிறது.
உங்களைப் பெற்ற பயன் ஒருவாறு பெற்றேன்."1

     இதுபோன்ற  உயிர்த் துடிப்புள்ள  உரைநடையைப் பயன்படுத்தியதால்
தான்   அடக்கப்பட்டும்   ஒடுக்கப்பட்டும்  கிடந்த ஏழை எளியவர்களுக்கு
எல்லாம்   எழுச்சியூட்ட   தேசியவாதிகளால்   முடிந்தது. 'மொழி' என்பது
கருவியாவதன்றி,   கர்த்தா   ஆவதில்லை. இதனை நினைவில் கொண்டால்,
விடுதலைப்  பேராட்ட  காலத்திலே  தமிழ்மொழி அடைந்த மறுமலர்ச்சியால்
தமிழ் இனமே விழிப்பு பெற்றதெனலாம்.

     மகாகவி     ஒருவர்   தமது   தாய்மொழியின்    உரைநடையையும்
வளப்படுத்துவதற்கு   வெற்றிகரமாகப்    பணி   புரிவதென்பது   எளிதான
காரியமன்று.   பிற   கவிஞர்களிடம்   காணமுடியாத இந்த அரிய பணியை
தேசியக்கவி பாரதியார் மிகவும் எளிதாகச் செய்து முடித்திருக்கிறார்.

"ஞானரதம்"

      'ஞான ரதம்' என்னும்  அவரது உரைநூல் தமிழ்த் தாய்க்கு இருபதாம்
நூற்றாண்டின்  முதல்  பத்தாண்டு  காலத்தில் பாரதி தந்த காணிக்கையாகும்.
இந்நூலைப்    பற்றி,   பிரபல   தேசியவாதியும்   தொழிற்சங்க   இயக்கத் 
தலைவருமான  திரு.எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியிருப்பது வருமாறு:


1. 'பத்மாசினியம்மாள் வரலாறு'பக்.1 244