பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 193

போற்றத்தக்கதாகும்.  "மோட்ச   சாதன   ரகசியம்" என்னும் அவரது நூல்,
வேதாந்த   ரகசியங்களை   எளிதில்  விளக்கும் திறமை தமிழ் மொழிக்கும்
உண்டென்பதைப் புலப்படுத்துகின்றது.

ராஜாஜியின் 'அபேதவாதம்!'

      தலைவர் ராஜாஜி,  தெளிவான உரைநடையிலே எண்ணற்ற நூல்களை
இயற்றியுள்ளார்.  மூதறிஞரான  அப்பெரியார், தாய்மொழியான  தமிழிடத்துக்
கொண்ட  ஆழ்ந்த   பற்றுதலின்  விளைவாக  எண்ணற்ற  தமிழ் நூல்களை
இயற்றியுள்ளார். ராஜாஜியின்  உரைநடை  அவருக்கெனவே அமைந்ததாகும்.

     ராஜாஜியின் உரைநடைபற்றி ரோமாபுரியிலுள்ள வாடிகன் நகரில் போப்
ஆண்டவரின் சாம்ராஜ்யத்தில்  பணிபுரிந்த  புனிதப் பாதிரியாரான ஜேரோம்
டிசௌஸா கீழ்வருமாறு கூறுகின்றார்.

     "இராஜாஜியினுடைய  மதியின்  தெளிவுக்கு  அனுசரணையாக அவரது
வாக்கும் தெளிவானது. அவரது  வாக்குவன்மை  விசேஷமானது. அவருக்கு
ஒரு  எழுத்து  நடை  உண்டு.  அது  எளிமையானது. நேரடியானது,  சக்தி
வாய்ந்தது,  விரிந்த  வீச்சு  உள்ளது. அதன் எளிமையைப்  பார்க்கும்போது
இப்படி விரிந்த வீச்சும் இருக்குமென்று தெரியாது ஏமாந்து விடுவோம்.  இது
அவரது தமிழ் நடைக்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன்."1

     புனிதப்  பாதிரியார், ராஜாஜியின் ஆங்கில உரைநடைக்கு  செய்துள்ள
விமர்சனம், அவரது  தமிழ் உரைநடைக்கும்  பொருந்துவதேயாகும். ராஜாஜி
முதன்  முதலாக  இயற்றிய   உரைநடை  நூல் அவரது சிறைவாசம் பற்றிய
"சிறையில் தவம்"  என்பதாகும்.  அவர்   தந்த  மற்றொரு  அரசியல் நூல்
"அபேதவாதம்"  என்னும்  பெயர்  கொண்டது.  ராஜாஜியின் உரைநடையை
உவமை   நடை    என்றும்    சொல்லலாம்.   எதையும்  உவமை காட்டி
விளக்குவதிலே    அவர்   தனி    ஆற்றல்    பெற்றவர்.  உவமையானது
உரைநடையின் அழகுக்கு அழகு செய்வதாகும்.

     'அபேதவாதம்'    என்ற     தமது    நூலிலே    தனிவுடைமையை
அழித்துவிட்டு, அதற்கு    மாற்றாகத்     தோன்றும்     பொதுவுடைமைச்
 சமுதாயத்தை   உருவகப்படுத்திக்   காட்டுகின்றார்.   இந்த நூல் - அவர்