நாடக மேடையில் புரட்சி! இந்திய விடுதலைப் போரின்போது இயற்றமிழும் இசைத் தமிழுமேயன்றி,
நாடகத் தமிழும் வளர்ச்சி பெற்றது. விடுதலைப் பாசறை வீரர்கள் நாடக
மேடையையும் விட்டுவைக்கவில்லை. அதனையும் கைப்பற்றி ஏகாதிபத்திய
எதிர்ப்புப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தினர்.
"நாடகம்" என்பதற்கு "நாடு முழுவதையும் தன்னகத்தே காட்டுவது"
என்றும் பொருள் கூறப்படுகின்றது. ஆனால், விடுதலைப் போருக்கு முன்பு
நாட்டின் நிலையைக் காட்டுவதாக நாடக மேடை இருக்கவில்லை. ஆம்;
மன்னர் நாடு திகழ்ந்த பெருமையைக் காட்டும் சரித்திரங்களையோ, பின்னர்
நாடு அன்னியர் வசப்பட்டு அல்லலுறுவதையோ, வருங்காலத்தில் நாடு
அடைய வேண்டிய விடுதலைக்கான வழியையோ மக்களுக்குப் போதிக்கும்
நாடகங்கள் அந்நாளில் நடத்தப்படவில்லை. மக்களுடைய வாழ்க்கையோடு
பொருந்தாத இதிகாச - புராணக் கற்பனைக் கதைகளே நாடக மேடையிலே
ஆதிக்கம் பெற்றிருந்தன. அந்த நிலையிலே மாறுதல் கண்டனர்
தேசியவாதிகள். மராத்தி வீரன் சிவாஜி, செஞ்சி வீரன் தேசிங்கு,
பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் ஆகிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின்
வீரவரலாறுகளையும்; காந்தியடிகள் சாத்வீக முறையில் தோற்றுவித்த தேசிய
எழுச்சியையும் பரப்ப நாடக மேடையைப் பயன்படுத்தி, நாடகக் கலையிலே
மறுமலர்ச்சி கண்ட பெருமையும் தேசியவாதிகளுக்கு உண்டு. இந்த அரிய
பணிக்காக கல்வியறிவும் முற்போக்குக் கொள்கைகளும் உடைய
தேசியவாதிகள் சிலர் நாடக ஆசிரியரகளாகவும், நடிகர்களாவும் மாறினர்.
இவர்களுடைய தொடர்பு காரணமாக தொழில்முறை நடிக-நடிகையரிலும் பலர்
தேசியவாதிகளாயினர். இந்த மாறுதல்களால் நாடகத் தமிழ் வளமும்
வளர்ச்சியும் அடைந்தது. தேச விடுதலை ஆர்வத்தையும் சமூக சீர்திருத்தக்
கொள்கைகளையும் பிரதிபலிக்கும் நவீன நாடக நூல்கள் தோன்றின.
இந்தக் காலத்தில்தான் 'கூத்தாடிகள்' என்று பெயர் பெற்று
மேன்மக்களால் இழிவாகக் கருதப்பட்டு வந்த நடிக நடிகையர் முதல்