முதலாக அரசியல் பெருந்தலைவர்களால் மதிக்கப்படும் மாண்பைப்
பெற்றனர். இது வரலாறு கூறும் வாய்மை. முதல் தேசிய நாடகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, காங்கிரஸ் மகாசபையின்
முதல் பத்தாண்டு காலப் பணியினையும், அதனால் விளைந்த பயன்களையும்
விளக்கி தமிழ்ப் பண்டிதர் கா.கோபாலாச்சார் என்பவர் 'ஆர்ய ஸபா' என்னும்
பெயரால் தமிழில் நாடக நூலொன்று இயற்றினார். பெயர் வட மொழியில்
அமைந்திருப்பினும், கவர்ச்சிகரமான எதுகை மோனை நடையிலே இயற்றப்
பட்டுள்ளது. பக்கங்களே கொண்ட இந்நாடக நூல், ஐந்து அங்கங்களைக்
்கொண்டதாக அமைந்துள்ளது. இதில் உள்ள பாடல்களை ஆசிரியரே
இயற்றியுள்ளார். மொத்தத்தில் நாடகம் தமிழில் எழுதப்பட்டிருப்பினும்,
பிராம்மணப் பாத்திரங்கள் இடையிடையே சமஸ்கிருத சுலோகங்களையும்
முழக்குகின்றன. இஸ்லாமியப் பாத்திரங்கள், நிறைய பாரசீகச் சொற்களைக்
கலந்து மணிப் பிரவாள நடையில் பேசுகின்றன ஐரோப்பியர்களே தோன்றும்
ஒரு காட்சி முழுவதற்கும் உரையாடல் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளது.
இது மேடையில் நடிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால்,
நடிப்பதற்காகவே இயற்றப்பட்டதாகும். தேசிய காங்கிரஸ் மகாசபை பிறந்த
பின்பு தமிழில் எழுதப்பட்ட முதல் தேசிய நாடகம் இதுதான்.
பாவலரின் பணி
காந்தி சகாப்தம் தோன்றுவதற்கு முன்பு நாடக அரங்கிலே ஏகாதிபத்திய
எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தியவர்கள் தெருக்கூத்துக் கலைஞர்களேயாவர்.
நவீன சாதனங்களைக் கொண்டு
1. கிருஷ்ணசாமிப் பாவலர், சிறந்த பக்திமான். முருக உபாசகர். பக்தி
மேம்பாடு காரணமாக கந்தர் கவசம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி பதிகம்,
போரூர் முருகர் அபிஷேக மாலை, வேம்படி வினாயகர் பஞ்ச ரத்தினம்,
கொன்றை மாநகர்ப் புராணம் ஆகிய கவிதை நூல்களை இயற்றினார். கலசைச்
சிலேடை வெண்பா நூலுக்கு உரை இயற்றினார்.
கிருஷ்ண தேவராயன், தேசிங்கு, நெப்போலியன், ஐதர் அலி ஆகிய
தேசபக்த மாவீரர்களின் வரலாறுகளை எழுதிப் பதிப்பித்துள்ளார். பள்ளி
மாணவர்களுக்கு பாட புத்தகங்களாகப் பயன்படும் பொருட்டு திருக்குறள் நீதிக்
கதைகள் ஆகிய கதை நூற்களையும் எழுதி வழங்கினார்.