பட்டுள்ளது. அதனாலேயே அதிகாரிகளின் விஷக்கண் பார்வை இந்த
நாடகத்தின் மீது விழுந்தது.
கலைஞர் தி.க.சண்முகம் தமது நாடகக் குழுவினர் நடித்த 'தேச பக்தி'
நாடகம் பற்றித் தெரிவித்துள்ள கருத்து வருமாறு: "தேசபக்தி" நாடகம், இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் போராட்டம்
நடந்ததுபோல், பாணபுரத்துக்கும் ஈசானபுரத்துக்கும் நடைபெறும்
போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நாடகத்தில் வெ.சாமிநாத
சர்மா அவர்கள் மிக உயர்ந்த உணர்ச்சிமிக்க உரைநடையைக்
கையாண்டிருந்தார்.
"வீர வாலீசன், ராஜத் துவேஷப் பிரச்சாரம் செய்ததாகக் குற்றம்
சாட்டப்பட்டு, கூண்டிலே நிற்கிறான். அப்போது அவன் பேசும் வீர உரையை
சாமிநாத சர்மா மிகுந்த உணர்ச்சியோடு எழுதியிருந்தார். அவ்வுரை இந்திய
தேசிய வீரர்களின் இதயத்தைத் திறந்து காட்டுவதாக அமைந்திருந்தது.
"வாலீசனாக வேடம் பூண்ட திரு. எஸ்.வி. சகஸ்ரநாமம் இந்த வீர
உரைகளை ஆவேசத்தோடு பேசி முழக்கம் செய்தபோது, சபையோர்
"மகாத்மாகாந்திக்கு ஜே", பகவத் சிங்குக்கு ஜே" என்றெல்லாம் எதிர்முழக்கம் செய்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
"1933 முதல் 1946வரை அதிகாரிகள் தந்த பலவிதமான இன்னல்களுக்
கிடையில் நாங்கள் "தேச பக்தி"யை நடித்து வந்தோம்... 1942 ஆகஸ்டுப்
போராட்டகாலத்தில் "தேசபக்தி" நாடகம் பல்லாயிரக் கணக்கான வீர
இளைஞர்களைத் தியாகத் தீயில் குதிக்கச் செய்தது."1
இராட்டைப் பாட்டு!
நாடகமேடையில் நடத்தப்பட்ட தேசிய நாடகங்கள் அதிகமில்லை;
சொற்பமே! ஆயினும் புராண நாடகங்களிலே - கதைக்குப்
பொருத்தமின்றியும் - தேசியப் பாடல்களைப் பாடி, அந்நாளைய நடிக-
நடிகையர் தேச பக்தியை வளர்த்தனர். இதனால் ஆன்ம ஒளி
பெருக்கும் தெய்வ பக்திப் பாடல்களையே வழி வழி கேட்டு
வந்த தமிழ் மக்கள், அடிமைத் தளையறுக்கும் தேசபக்திப் பாடல்
1. 15-6-66 சென்னை வானொலியில் பேசியது