களையும் தமிழில் கேட்கும் பேறுபெற்றனர். இது காந்தி சகாப்தத்திலே நாடகத்
தமிழ் அடைந்த மறுமலர்ச்சியாகும். கதர் கப்பல் கொடி தோணுதே
கரம் சந்த்ர மோகன தாஸ்
காந்தி இந்தியா சுதேச (கதர்)
என்றும்,
ஆடு ராட்டே சுழன் றாடு ராட்டே - சுய
ஆட்சியைக் கண்டோமென் றாடு ராட்டே
என்றும்,
நம்பிக்கை கொண்டெல்லோரும் கை
ராட்டை சுற்றுவீர்! - கை
ராட்டை சுற்றுவீர் - சுய
நாட்டைப் பற்றுவீர்!
என்றும் தொடங்கும் கைராட்டைப் பாட்டுகளைப் பாடாமல் அந்நாளில்
எந்த நாடகமும் நடந்ததில்லை. நடிக- நடிகையரேயன்றி நாடகத்தில் ஒரு
காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமிடைய உள்ள அவகாசத்தில் ஆர்மோனியக்
காரர்களும் தேசியப் பாடல்கள் பாடுவார்கள்.
தேசியக் கவி ராஜா சண்முக தாஸ், லட்சுமண தாஸ், மதுரபாஸ்கர தாஸ்,
சுந்தர வாத்தியார், கவி ஆறுமுகனார் முதலிய பாவலர்களின் பாடல்களே
பெரும்பாலான நடிக நடிகையரால் பாடப்பட்டன.
பெருந்தலைவர் ஒருவர் மரணமடைந்தால், அந்த நாளிலேயே அவர்
பெருமை பேசும் பாடல்கள் பிறந்துவிடும். எங்கிருந்தோ, யாராலோ இயற்றப்
படும் அந்தப் பாடல்கள் நாடகக்காரர்களின் தொண்டால் நாடு முழுவதிலும் மக்களெல்லாம் பாடத்தக்க செல்வாக்கைப் பெற்றுவிடும். இப்படி, நூறு நூறு
பாடல்களை இயற்றி, தேச பக்தியை வளர்த்து, நாடகத் தமிழுக்குப் புதுவாழ்
வளித்த கவிஞர்களின் பெயர்களைக்கூட மக்கள் மறந்துவிட்டனர். அந்தப்
பாடல்களும் முழு அளவில் பாதுகாத்து வைக்கப்படவில்லை. அந்தக் கவிஞர்
களையெல்லாம் புறக்கணித்து இந்திய விடுதலைப் போர் வரலாற்றை எழுதி
முடித்தால், அது முழுமை பெறாது; மூளியாகத்தான் இருக்கும்.