பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 211

ஆரம்பத்தில்,   ஞாயிற்றுக்   கிழமைதோறும்  பகல்    நேரத்தில்  ஒத்திகை
நடைபெற்று வந்தது. காரியாலயத்திலேதான் எல்லா  ஒத்திகைகளும். ஐயருக்கு
ஞானசாகரர் வேஷமும், எனக்குக் காளிதாசன்  வேஷமும்,  நடராஜப்பிள்ளை
என்பவருக்கு போஜன் வேஷமும் கொடுக்கப்பட்டிருந்தன. இங்ஙனம் வேஷம்
தாங்குவதோடு ஐயருக்கு நாடகத்தை நடத்திக்கொடுக்கிற பொறுப்பும்,அதாவது 'டைரக்ட்' செய்கிற பொறுப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

     "ஒத்திகைகளில்  ஐயர்  எவ்வளவு குதூகலத்துடன் கலந்து  கொண்டார்!
எப்படி     எப்படியெல்லாம்     நடிக்க   வேண்டுமென்று    எங்களுக்குக்
கற்றுக்கொடுத்தார்! அவருக்கிருந்த ஆர்வத்தையும் தேர்ச்சியையும் அப்போது
நான் அறிந்து கொண்டேன்."1


1. 'நான்கண்ட நால்வர்';பக்.106-108