நாடக மேடையில் ஏற்படவேண்டிய சீர்திருத்தம் பற்றி வாய்ப்பு
நேர்ந்தபோதெல்லாம் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் தலைமுறையில் நாடக
மேடை அடைந்துள்ள பல சீர்த்திருத்தங்களுக்கு முந்திய தலைமுறையின்
தேசியவாதிகள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சிகளும் காரணமாகும்.நாட்டியத்திலும் தேசியவாதிகள்!
திரு. ஈ. கிருஷ்ணய்யர்1 சுகுண விலாச சபையின் நடிகராவார். இவர்,
சிறைசென்ற தேசபக்தர். பி.ஏ., பி.எல்., படித்த வழக்கறிஞர். காங்கிரஸ்
கமிட்டிகளிலே பல பதவிகளை வகித்தவர். சென்னை மாநகராட்சி
அங்கத்தினராகவும் இருந்தவர். இவர் சட்டத்தை மீறிய சத்தியாக்கிரகியாக
சென்னை பிரதமமாகாண மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது,
"உனக்கு என்ன வேலை?" என்று மாஜிஸ்திரேட் கேட்ட கேள்விக்கு, "என்
மன விருப்பப்படி கலைத் தொழில்; ஆனால், கட்டாயத்தின் பேரில்
வழக்கறிஞர் தொழில் புரிகிறேன்" என்று பதிலளித்தாராம். இது ஒன்றே இவர்
கலைக்கெனவே வாழ்ந்தவர் என்பதற்குச் சான்றாகும். இவர், நாட்டியக்
கலையிலும் தேர்ச்சி பெற்று, பிறர்க்கு நாட்டியம் பயிற்றுவிக்கும் புகழ்மிக்க ஆசிரியராகவும் விளங்கினார். குடும்பப் பெண்களும் நாட்டியம் பயிலலாம்
என்ற நிலைக்கு நாட்டியக் கலைஞர்களின் தரத்தை உயர்த்தினார்.
திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் பெண் வேடத்திலேயே
தோன்றி நடித்தார்.
சிறைசென்ற தேசியவாதியான திருச்சி எப்.ஜி.நடேசய்யர், தமிழ்
நாடகங்களில் மட்டுமன்றி, ஆங்கில நாடகங்களிலும் நடித்துள்ளார். சுகுண
விலாச சபை நாடகக் குழுவினருடன் சேர்ந்து நடித்ததோடு,திருச்சியில் தாமே
முயன்று தனியாக ஒரு நாடகக் குழுவை அமைத்து, அதன் சார்பிலும்
பல நாடகங்களை நடத்தினார். இவரை, "ஆற்றல் மிக்க நல்ல நடிகர்"
என்று பம்மல் சம்பந்த முதலியார் வருணிக்கிறார். ஆங்கில நாடகப்
பேராசிரியரான ஷேக்ஸ்பியர் எழுதிய "ஹாம்லெட்" ஷெரிடன் எழுதிய
"பிஸாரோ" ஆகிய ஆங்கில நாடகங்களில் முக்கிய
1. இவர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில், தமிழ்நாடு சங்கீத - நாடக
சங்கத்தின செயலாளராகப் பதவி வகித்தார்.