பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 217

பாத்திரங்கள்  ஏற்று, திறம்பட  நடித்துப் புகழ் பெற்றார். சம்பந்த  முதலியார்
எழுதிய  'மனோகரன்'  நாடகத்திலேயும்  மனோகரன்  பாத்திரத்தை  ஏற்றுப்
பலமுறை   நடித்துள்ளார்.   இந்த   நாடகத்திலே   தமக்கிருந்த  பற்றுதலை
வெளிப்படுத்தும்  வகையில்  திருச்சி  உறையூரில் தாம்  வாழ்ந்த  வீட்டிற்கு
"மனோகர விலாஸ்"  என்று பெயர்  வைத்தார். இவர் முதல்தரமான அரசியல்
வாதியாகவும், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார்.

வாரிசுகளை வழங்கினார்!

     தமிழ்  நாடகத்  தந்தை  தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரசியலுக்கு
அப்பாற்பட்டவராகவே     நாடகத்     துறையில்       தொண்டாற்றினார்.
தமிழ்மொழியிடத்து ஆழ்ந்த  பற்றுதலும்,  அதிலே  அதிகமான   பயிற்சியும்
பெற்றிருந்தார்.  தமிழ்ப்  புலவர்களிலேயே  பெரும்பாலோர் சங்க இலக்கியப்
பயிற்சிபெற்றிராத அந்தக் காலத்திலே, நம் சுவாமிகள் சங்க இலக்கியங்களிலே
பெரும்  புலமை  பெற்றிருந்தார்.   அந்நாளில்,   நாடகத்  தமிழ்-உரையிலும்
பாட்டிலும்-கலப்புத்  தமிழாகவே  இருந்தது.  நாடகக்  குழுக்கள் பெற்றிருந்த
பெயர்களிலே ஒன்றுகூட தமிழ்ப் பெயராக இருக்கவில்லை. வடமொழியாகவோ,
ஆங்கிலமாகவோதான் இருந்தன. ஆம்; அந்நாளைய சூழ்நிலை அப்படி! அந்த
மோசமான சூழ்நிலை காரணமாக, சுவாமிகளின் பாடல்களும் உரையாடல்களும்
மணிப்பிரவாளமாகத்தான் இருந்தன. ஆயினும்,நாடகங்களின் பாடல்களிலேயும்
உரையாடல்களிலேயும் நம் சுவாமிகள் சங்கஇலக்கியங்களின் கருத்துக்களையும்
செய்யுட்களையும் புகுத்தினார். இதனை, அவர் எழுதியுள்ள ஒவ்வொரு நாடக
நூலிலேயும் இன்றும் காணலாம்.  'சுலோசனா சதி' நாடகத்திலே வரும் இந்திர
ஜித்தனும் சங்கத் தமிழின் பெருமையைப் பற்றி நீண்ட சொற்பொழிவாற்றுவான்!

     சுவாமிகள் தேசியப்  பாசறைக்குப்  புறம்பாகவே  வாழ்ந்தாரென்றாலும்,
தம்முடைய வாரிசுகளை அந்தப்  பாசறைக்கு  வழங்கிய பெருமை அவருக்கு
உண்டு.

      நாடகப்  பாரம்பர்யத்திலே  சுவாமிகளின்   வாரிசுகளாக   விளங்கும்
டி.கே.எஸ்.சகோதரர்கள்  - தி.க. சங்கரன்,  தி.க.முத்துசாமி,    தி.க.சண்முகம்,
தி.க.பகவதி  -  மிகச்     சிறந்த     தேசியவாதிகளாவர்  .    விடுதலைப்