போராட்ட காலத்திலே, காங்கிரஸ் கமிட்டிகளின் நிதிக்காகவும் தனிப்பட்ட தேசியவாதிகளின் நலனுக்காகவும் நாடகங்கள் நடத்தியும் கைப்பொருள்
கொடுத்தும் உதவியுள்ளனர். கிருஷ்ணசாமிப் பாவலர், வெ.சாமிநாத சர்மா
ஆகியோர் இயற்றிய தேசிய நாடகங்களில் இவர்கள் நடித்துள்ளனர்.
திரு.எத்திராசலு என்பார் எழுதிய "ஒளவையார்" நாடகத்தை 1942 ல்
அரங்கேற்றி, தமிழ் மொழியின் புகழைப் பரப்புவதிலே தலைமை பெற்றனர்.1 ஒரு சிலரின் தனிவுடைமையாக இருந்த பாரதியார் பாடல்கள்
தி.க.சண்முகம் அவர்கள் முயற்சியால்தான் நாட்டின் பொதுவுடமையாயின.
இவர், தமிழிலே ஆழ்ந்த பற்றும் பயிற்சியுமுடையவர். தம் குழுவின் சார்பில்
நடத்திய நாடகங்களிலேயும் பாரதியார் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.
தமிழ் மொழியை வளர்ப்பதனையும், தமிழினத்தின் தனி நலன்களைக்
காப்பதனையும் குறிக்கோள்களாகக் கொண்டு, அவற்றோடு பாரத தேசிய
ஒருமைப்பாட்டினைக் காக்கும் பணியினையும் பிணைத்துச்செயலாற்றும் ஒரு
நாடகக் குழு இன்று தமிழகத்தில் உண்டென்றால், அது, டி.கே.எஸ்.
சகோதரர்களின் நாடகக் குழுவேயாகும்.
இந்தக் குழுவினர், தாங்கள் நடத்தும் ஒவ்வொரு நாடகத்தின்
துவக்கத்திலே, "வாழிய தமிழன்னை வாழ்கவே" என்ற யோகிசுத்தனாந்த
பாரதியாரின் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியிலே பாரதியாரின் 'வாழ்க
நிரந்தரம்' என்ற வாழ்த்தும் பாடி வருகின்றனர்.
மன்னார்குடி எம்.ஜி.நடராசப் பிள்ளை, கடந்த தலைமுறையின் மிகச்
சிறந்த நடிகராவார். இவர், மன்னார்குடி நகரமன்றத்தின் அங்கத்தினராக
இருந்து, நடிகர் குலத்துக்குப் பெருமை தேடினார். காங்கிரஸ் கமிட்டிகளிலேயும்
அங்கம் வகித்தார். அந்நாளில், விடுதலைப்போரில் ஈடுபட்டுச் சிறை செல்லும்
பேறுபெற்ற நடிகர்கள் மிகச் சிலரே யாவர். அவர்களிலே இவர் முதல்வராக
விளங்கினார். இவர், கதாநாயகனாவே நடித்துப் புகழ் பெற்றார். இவருடன் பல
1. சுதந்திரத்துக்குப் பின்னும், சேலம் சித்தராசன் எழுதிய "தேசபக்தர்
சிதம்பரனார்", திரு. ரா.வேங்கடாசலம் எழுதிய கட்டபொம்மன் புகழ் மணக்கும்
"முதல் முழக்கம்" ஆகிய நாடகங்களை நடத்தி, நாட்டில் தேசிய உணர்வு
குன்றாமல் காத்து வந்துள்ளனர்.