பக்கம் எண் :

22விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     கன்னாட்டி அமர்பொருது கட்டபொம்மன்
         ட்டதிசை களும்சீர் நாட்டித்
     தென்னாட்டுச் சிங்கமெனச் சிறந்திருந்தான்
         பொன்னாடு சேர்ந்தான் அம்மா! 

     இதுகாறும்    எடுத்துக்காட்டிய    செய்யுள்    இலக்கியங்களேயன்றி,
வீரபாண்டியக் கட்டபொம்மன் வரலாறு  கூறும் நாடக நூல்களும் தோன்றின.
அந்த நாடகங்கள் பாண்டிநாட்டில் ஊர்தோறும் நடிக்கப்பட்டும்  வந்துள்ளன.

     வீரபாண்டியக்  கட்டபொம்மன் தூக்கில் மாண்டபோது, அவன் மாவீரத்
தம்பி ஊமைத்துரை என்பான், பாளையங்கோட்டைச் சிறையிலே அடைபட்டு,
பரங்கியர்  காவலில் இருந்தான். அண்ணன்  மாண்ட  ஓராண்டுக்குப் பின்னர்,
பாளையங்கோட்டைச்  சிறையைத் தகர்த்து வெளிப்பட்டு, இரவோடு இரவாகப்
பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தான்.ஆங்கு ஆங்கிலேயரால் தரைமட்டமாக்கப்
பட்ட  கோட்டையை   மீண்டும் எழுப்பி , அதற்குள்ளே   போர் வீரர்களை
மறைத்து,  தொடர்ந்து  பல மாதங்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் போர்
புரிந்தான். இந்த இரண்டாவது  கட்டப்பேரரிலும்  ஊமைத்துரை தோல்வியுற்று,
பரங்கியர்  அறியாமல்  சில மாதங்கள்  மறைந்து வாழ்ந்தான். அதன் பின்னர்
சிவகங்கை சேர்ந்து, சகோதர பாளையக்காரர்களான மருதுபாண்டியருடன் கூடி,
திரும்பவும்  மூன்றாவது  கட்டப்போரை  நடத்தினான் . அந்தப்போர், "மருது
பாண்டியர் போர்" என்று  கூறப்படுகின்றது . அதுவே, பரங்கியர்  ஆட்சியை
எதிர்த்துப்  பாண்டி  நாட்டின்  பாளையக்காரர்கள்   நடத்திய  இறுதிப்போர்.

சிவகங்கைச் சரித்திரக் கும்மி

     மருது பாண்டியரைப் புகழ்ந்தும், அவர்கள் நடத்திய விடுதலைப்போரை
வருணித்தும்  கவிதை  இலக்கியங்கள் பல தோன்றின. அவற்றில் தலையாயது
"சிவகங்கை சரித்திரக் கும்மியும், அம்மானையும்" என்ற  நூல். பெரிய  மருது
என்பான் காளையார்கோயில் ஈசுவரன்கோயிலை நிர்மாணித்த பெருமைக்குரிய
வனாவான். அந்தக் காளையார்கோவில் கோபுரத்தில் ஏறிப்பார்த்தால், மதுரை
மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் தெரியுமாம் . இதனை,

     கரும லையிலே கல்லெடுத்துக்
          காளையார் கோவில் உண்டுபண்ணி