மதுரைக் கோபுரம் தெரியக்கட்டின
மருது வாரதைப் பாருங்கடி!
சாந்துப்பொட்டு தளதளங்க
சந்தனப் பொட்டு கமகமங்க
மதுரைக் கோபுரம் தெரியக்கட்டின
மருது வாரதைப் பாருங்கடி!
என்ற பாடல்களிலே அழகுற வருணிக்கிறார் ஆசிரியர். இந்நூலைப்
பாடியவர் , சர்க்கரைப் புலவர் மகன் சாந்துப்புலவராவார்.
பாளையக்காரர்கள் போரையொட்டிய பழமொழிகளும் பல உண்டு.
காகம் பறவாது கட்டபொம்மு சீமையிலே,
கொடுத்தால் கட்டபொம்மு கொடுக்கவேண்டும்,
விளைந்தால் கரிசல்காடு விளைய வேண்டும்.
தொண்டைக் குழியிலே ஜீவனுள்ள மட்டும்
தோக்கலவார் ஜாதி தோக்குமோடா!
என்பன போன்ற எண்ணிறந்த பழமொழிகள் பாண்டிநாட்டில் இன்னும்
வழங்கி வருகின்றன.
வீரபாண்டியன் மீது "வீரபாண்டியன் அநுராக மாலை" என்னும்
சிருங்காரச் சுவை தம்பும் கவிதை இலக்கியமொன்றும் இயற்றப்பட்டுள்ளது.
இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
பாளையக்காரர்கள் போரை யொட்டி எழுந்த இலக்கியங்களில்
ஒன்றிரண்டைத் தவிர, மற்றவற்றை இலக்கணக் கட்டுக்கோப்போடும் இலக்கிய
அமைதியோடும் கூடியவையென்று சொல்வதற்கில்லை. ஆயினும், பிரிட்டிஷ்
ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஈடுபட்ட தேசபக்த பாரம்பரியத்தினரின்-அவர்களின்
மூதாதையர்களாக விளங்கியவர்களின் - வரலாறு என்ற பெருமை இந்த
இலக்கியங்களுக்கு உண்டு. "பொருள்" பாடினோர்
பாளையக்காரர் போர் நடந்த காலத்திலே, சமுதாயத்தில்
முன்னணியில் நின்ற பெரும் புலவர்களில் எவரும் ஏகாதிபத்திய
எதிரிகளைப் புகழ்ந்து பாடத் துணிவு பெறவில்லை. மாறாக,