24 | விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு |
அவர்களிலே பலர் பிரிட்டிஷ் விசுவாசிகளாகவும் விளங்கினர். அதனால், போதிய இலக்கணப் பயிற்சி பெற்றிராத கவிஞர்களே தங்களுக்கிருந்த தேசபக்தி காரணமாக -பரங்கியரை எதிர்த்துப் போர் புரிந்த பாளையக்காரர் களின் புகழ்மிக்க வரலாற்றைப் பாடி, அது காரணமாக, ஆங்கிலேயரின் அடக்குமுறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர். பாளையக்காரர் போர்பற்றிய கவிதை இலக்கியங்களிலே இலக்கண வழுக்கள் மலிந்திருப்பினும், கற்பனைத் திறமும், சொற்சுவையும், பொருட்சுவையும் மிகுந்துள்ளன என்பதில் ஐயமில்லை. இது எப்படியாயினும் சரி; இளங்கோவடிகளுக்குப் பின்னர், நடைமுறை அரசியல் பற்றிப்பாடும் கவிஞர்கள் தோன்றாதொழிந்தனர் . தோன்றிய கவிஞர்களெல்லாம் அறம் பாடினர், நீதி போதனையாக ! இன்பம் பாடினர் ஜீவான்மாவானது பரமான்மாவைக் காதலிக்கும் பாவனையிலே! இதற்கப்பால், பரலோக வாழ்வை விரும்பும் 'வீடு' பற்றியும் பாடினர். ஆனால், புருஷார்த்தம் நான்கினுள் ஒன்றான அரசியல் பற்றிப்பாடவில்லை. அதனால், தமிழ்மொழியில் நடைமுறை அரசியல் பற்றிய இலக்கிய மெதுவும் தோன்றவில்லை. பல நூற்றாண்டுகளாக! அந்தக் குறைபாட்டினை அகற்றிய பெருமை பாளையக்காரர் போர் பற்றிய இலக்கியங்களைப் படைத்த கவிஞர்களுடையதாகும். |
|
|
|