பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 225

தியாக பூமிக்குத் தடை!

      'தியாக  பூமி'  என்னும் மற்றொரு திரைப்படத்தை டைரக்ட்  செய்தும் தயாரித்தும் வெளியிட்டார் கே. சுப்பிரமணியம். இது, புகழ் மிக்க  எழுத்தாளர்
'கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தி  அவர்களால்  அப்போது ' ஆனந்த  விகடனி'ல்
தொடர்கதையாக  எழுதப்பட்டதாகும்.  இதில்,  எஸ். டி. சுப்புலட்சுமி,  பேபி
சரோஜா, கே.ஜே.மகாதேவன், பாபநாசம் சிவன் ஆகியோர் நடித்தனர். இந்தப்
படத்திற்கு  விமர்சனம்  எழுதிய   பத்திரிகைகள்   பெருத்த  விவாதத்தைக்
கிளப்பின.  அந்த  விவாதத்திற்கெல்லாம் திறம்படப் பதிலளித்தார், ஆசிரியர்
'கல்கி',  'தியாக  பூமி'  மிகச்  சிறந்த  சமூகப்  படமாகும். இதன் மூலக்கதை
நூலைப்  பற்றி  எழுதப்பட்ட  விமர்சனத்தின்   சிறந்த   பகுதியை   இங்கு
பார்ப்போம்:

      "சமூகத்தில் காந்தியத்தின் பிடிப்பை வடித்தெடுக்க விரும்பினார் 'கல்கி'.
அரிஜன முன்னேற்ற இயக்கத்தைப் பின்னணியாகக் கொண்டு தஞ்சை ஜில்லா
மிராசுதாரர்களைக் கொணர்ந்து நிறுத்தினார் 'தியாக பூமி'யில்.

      "சம்பு  சாஸ்திரி  பழமையின்  சின்னமாக   முதலில்   தோன்றுகிறார்.
கழிவிரக்கத்தின் விளைவாக அரிஜன மக்களுக்கு இடந்தருகிறார்..."

     "திருமணச்    செலவுகள்,    சீர்கள்    முதலியவற்றின்    விளைவாக
பெருங்குடும்பங்கள்  நலிவதைக்  காட்டும்  நோக்கத்தை  சம்பு  சாஸ்திரிகள்
மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார் கதாசிரியர்."

      "சம்பு  சாஸ்திரிக்கு  தேசிய  இயக்கம்  இயற்கையானது.  சாஸ்திரியும்,
ஸ்ரீதரும் ஒரு புகலிடமாகக் கொள்கிறார்கள். 'ஆபத்சந்நியாசம்' போல் தேசியப்
போராட்டத்தில் இறங்குகிறார்கள்."1

      இந்த       எடுத்துக்காட்டு,     'தியாக  பூமி'  யின்       தேசியத்
தன்மையை     விளக்குவதாகும்.     விடுதலைப்போரில்     நேரடியாகவே
தொடர்பு கொண்டவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி.  சிறைசென்ற  தியாகியுமாவார்.
முன்னணி    அரசியல்வாதியாகவும்     விளங்கினார்.   இந்தப்   படத்தைத்
தயாரித்து    டைரக்ட்    செய்த   கே.சுப்பிரமணியம்  அவர்கள், படத்தைக்
காணும்     மக்கள்     தேசிய     ஆர்வம்     கொள்ளும்     வகையில்


1. 'தினமணி'17-12-68.