ஒரு தேசியவாதி என்ற முறையில் தமது தலைமையுரையில் தெளிவுபடுத்தினார்: "அரசியல் விஷயங்களில் பிரதான கவனம் செலுத்த வேண்டிய நாட்டில் கலைக்கு என்ன ஸ்தானம் அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது
சற்றுக் கடினமான விஷயமே. நம்முடைய நாட்டின் தனிப்பெருமை
என்னவென்றால், தேசிய இயக்கம் சகல துறைகளிலும் வியாபித்திருப்பதால்
கலைக்கும் பிரதானம் கொடுக்க யாவரும் தயாராயிருக்கின்றனர்."
"உங்களுடைய தொழிலை முடிந்தமட்டில் 100க்கு 100 சுதேசியமாகச்
செய்யவேண்டும். உடை, ஜோடனை சாமான்கள், நகைகள் எல்லாம்
சுதேசியாயிருக்க வேண்டும். ஸ்டூடியோ சாமான்கள் இந்தியாவில் செய்யும்
நாள் வரும் வரையிலும் அவை தவிர மற்றவைகளெல்லாம் சுதேசியாயிருக்க
வேண்டும்."1
ஐயரவர்கள், இந்திய சட்டசபையில் காங்கிரஸ் சார்பில் அங்கம்
வகித்தபோது, திரைப்படத் தொழில் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளராகவும் நடிக-நடிகையராகவும் இருந்தவர்களிலே வேறு பலரும் மிகச் சிறந்த தேசியவாதிகளாகவும் தேசபக்தர்களாகவும் சிறை
சென்ற தியாகிகளாகவும் விளங்கினர். அவர்களுடைய பெயர்களும் வாழ்க்கைக் குறிப்புகளும் திரட்டப் பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
1. "சத்தியமூர்த்தி பேசுகிறார்" என்ற நூலில்,"சலனக்காட்சிப்படங்கள்" என்னும்
பகுதியில்