நடைபெற்றதால், போர் முறைகளிலே ஒளிவுமறைவு இருக்கவில்லை. அத்தகைய
முறைகளைக் கையாளக் கூடாதென்பதும் காந்தியடிகளின் கட்டளையாக
இருந்தது. திலகர் சகாப்தத்திலே, இங்கொருவர் அங்கொருவராகச் சில தனி
நபர்களோ, குழுக்களோ ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டதுண்டு. ஆயினும்,
காங்கிரஸ் மகாசபையைப் பொறுத்த வரையில், ஆயுதப் புரட்சிக்கு அது திட்டமிடவில்லை. அதனால் திலகர் சகாப்தத்திலேயும் சுதந்திரம்
பெறுவதற்கான பிரதான சாதனம் பேச்சு மேடையாகவே இருந்தது. உயர்தரக்
கல்வி கற்றுப் பட்டம் பெற்ற பெருந்தலைவர்களானோர், கல்வியறிவற்ற
சாதாரண மக்களோடு நெருங்கிய தொடர்புகொள்ளவும் பேச்சு மேடை
அந்நாளில் பெரிதும் பயன்பட்டது. இதனால், படித்த பட்டதாரிகளுக்கும்
படிக்காத பாமர மக்களுக்கும் நடுவே இருந்த இடைவெளி பெருமளவுக்குக்
குறைந்தது. படித்தவர்களைப் பார்த்து, "கிராமங்களுக்குப் போங்கள்” என்று
காந்தியடிகள் உபதேசம் செய்வதும் சாத்தியமாயிற்று.
சுதந்திரத்திற்காகப் போராடிய வேறு எந்த நாட்டின் வரலாற்றிலும்
காணாத ஒரு புதிய செயல்முறை இந்திய சுதந்திரப் போராட்டத்தில்-குறிப்பாக,
காந்தி சகாப்தத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, கதர் அபிவிருத்தி,
தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, இந்து - முஸ்லிம் ஒற்றுமை, உழவர் -
தொழிலாளர் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய ஆக்கவழிப்
பணிகளை நிறைவேற்றுவது நாடு விடுதலை பெறுவதற்கான வழி என்று
நம்பப்பட்டது. இந்த ஆக்க வேலைகளுக்காக மாநாடுகள் கூட்டியும்
பொதுக்கூட்டங்கள் போட்டும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம்
இருந்தது. காந்தியடிகள், சட்டத்தை மீறும் போராட்டங்களைவிட ஆக்க
வேலைகளே அன்னிய அரசை வெளியேற்றும் ஆற்றல் பெற்றவையென்று
நம்பியதோடு, நாட்டு மக்களையும் நம்ப வைத்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் 'காந்தி சகாப்தம்' என்பது
முப்பதாண்டு காலமாகும். இந்த முப்பதாண்டு காலத்தில மூன்று முறைதான்
சட்டமறுப்புப் போர் நடத்தினார் காந்தியடிகள்.
நாடு தழுவிய முறையில் அடிகளார் நடத்திய முதற்போர், 1921-1922ல்
நடந்த ஒத்துழையாமையாகும். இரண்டாவது போர்,