1931 - 1932 ல் நடந்த உப்பு சத்தியாக்கிரகமும் அதனையொட்டி நடந்த
சட்டமறுப்புமாகும். மூன்றாவது போர், 1940 - 41ல் நடத்திய தனிநபர்
சத்தியாக்கிரகமும் அதனைத் தொடர்ந்து அடிகள் துவக்கவிருந்த ' ஆகஸ்டுப்
புரட்சி'யுமாகும். ஒரு போராட்டத்திற்கும் இன்னொரு போராட்டத்திற்கும் இடையே பத்து
ஆண்டுகால அவகாசம் இருந்ததனை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த அவகாசத்தில் பிரச்சாரம் செய்வதையே பிரதான பணியாகக்கொண்டனர்
தேசியவாதிகள். இதனால் காந்தி சகாப்தத்திலே மேடைப் பேச்சு பிரதான
போர்க் கருவியாக இருந்தது புலனாகும். இந்தியாவிலே பிரச்சாரத்தை ஒரு
கலையாகவே வளர்த்து வைத்த 'பெருமை' தேசியவாதிகளுக்கே உரியதாகும்.
பொதுமக்களோடு தொடர்புகொள்வதன் அவசியத்தை பின்னால் தோன்றிய
அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் முன்னோடிக் கட்சியாக அந்நாளில்
காங்கிரஸ் விளங்கியது. சுருங்கச் சொன்னால், 'காந்தி சகாப்தம்' என்பது 'சொற்பொழிவு சகாப்த'மாக இருந்ததெனலாம். தேசபக்தர் வ.வே.சு.ஐயரவர்கள்,
"நம் நாட்டில் இப்பொழுது தோன்றியிருக்கிற புதிய கிளர்ச்சியானது
இவ்யுகத்தைப் பிரசங்கயுகமாக்கியிருக்கிறது என்று சொல்வது பொருந்தும்."1
என்று வருணித்துள்ளார்.
பிரசங்க யுகத்தைத் தோற்றுவித்தவர்களிலே முதல்வரான காந்தியடிகள்
பேச்சுக் கலையில் வல்லவர் என்று சொல்வதற்கில்லை. இதனை, அவரே தமது
'சத்திய சோதனை'யில் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரைப்
பின்பற்றியவர்களிலே நாவன்மையுடையோர் மிகுந்திருந்தனர்.
தேசியவாதிகளில் எழுத்தாளர்களாக விளங்கியவர்களிலே பலர், அரிய
இலக்கியங்களைப் படைத்துள்ளனர் என்பதை முன்பே அறிந்தோம். அதுபோல
மேடைப் பேச்சிலே வல்லவர்களாக விளங்கியவர்களுடைய பேச்சுக்கள் நூல்
வடிவம் பெற்று, அவை இலக்கியக் களஞ்சியத்திலே சேர்க்கப்படவில்லை.
இந்தக் குறைபாடு இன்னும் நீடிக்கத்தான் செய்கின்றது. நம் நாட்டுப்
பெருந்தலைவர்களுடைய மேடைப் பேச்சுக்கள், அவர்களாலோ பிறராலோ
1. ‘பாலபாரதி’; நவம்பர், 1924