பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 235

     அந்நாளில்,  பொதுக்கூட்ட   மேடையையேயன்றி,  சட்டமன்றத்தையும்
பிரச்சார  மேடையாகப்  பயன்படுத்தினர்  தேசியவாதிகள்.  இந்தப்  பணிக்கு
அளவற்ற அறிவுத்திறனும் ஆண்மையும் தேவைப்பட்டன. அவை, அந்நாளைய
தேசிய வாதிகளிலே பலரிடம் நிறைய இருந்தன.

சட்ட மன்றத்திலே தமிழ்

      தமிழ்-தெலுங்கு-மலையாள-கன்னட மொழிப் பகுதிகள் கலந்த கதம்பப்
பிரதேசமாக   விளங்கிய   பழைய   சென்னை  மாநிலத்திலே,  சட்டமன்றம்
(லெஜிஸ்லேடிவ் கவுன்சில்)  ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. தமிழிலே பேச
ஒருவரும்  ஆர்வங்  காட்டினாரில்லை. ஆனால், விடுதலை இயக்கம்  மக்கள்
இயக்கமாக  மலரத்  தொடங்கிய  காந்தி  சகாப்தத்திலே  சென்னை மாநிலச்
சட்டமன்றத்திலேயும்  தமிழ்   ஒலிக்கத்   தொடங்கியது.   அந்தப்  பெரும்
புரட்சியைத் துவக்கிவைத்தவர் சேலம் பி.வி.நரசிம்ம ஐயர் என்கிறார் திரு.வி.க.

      "அக்காலத்தில்  சட்ட சபையில் ஆங்கிலமே பேசப்படும்.  தமிழர்க்கும்
தமிழ்  நினைப்பு  வருதல்  அருமை.  அப்பஞ்ச நாளில் சேலம் பி.வி.நரசிம்ம
ஐயர் சட்டசபையில் ஒருமுறை தமிழில் பேசினார். அதுபற்றி  எப்பத்திரிகையும்
குறிப்பு  எழுதவில்லை. ' தேசபக்தன் ' மட்டும்  ஒரு  குறிப்புப் பொறித்தான்.
அதுகண்ட நரசிம்ம ஐயர் 'தேசபக்த'னுக்கு வாழ்த்துக் கூறினார்."1

     காங்கிரசில்  காந்தியடிகள்  செல்வாக்கு பெற்ற பிறகு அம்மகாசபையின்
நடவடிக்கைகளிலே  ஆங்கில  ஆதிக்கம்  தேய்பிறையானது. தாய்  மொழிப்
பற்றுடைய  தேசபக்தர்கள்  தத்தம் தாய்மொழியில் பேச ஆர்வம் பெற்றனர்.

     மாநில  சட்ட    மன்றங்களிலேயும்     இந்திய (மத்திய) சட்டமன்றத்
்திலேயும்  அங்கம்   வகித்த    தேசியவாதிகள், தங்கள்   நாவன்மையைக்
்காட்டிபிரிட்டிஷாரைக்  கதிகலங்க       வைத்தனர்.  அந்நாளைய மாநில-

மத்திய  சட்ட    மன்றங்களிலே  நம் தேசத்தலைவர்கள்  அந்நிய அரசின் அமைச்சர்களையே   நிந்தித்தனராதலால்,     அவர்களுடன் ஒத்துழைத்தல்
என்ற பேச்சுக்கே   இடமின்றி,  எல்லா      விஷயங்களிலும்   எதிர்த்துப் 
போராடி,   ஆட்சியைக்   கவிழ்க்க   முயல்வதையே கடமையாகக்
கொண்டிருந்தனர்.  அதனால்,   முதல்    தரமான    பார்லிமென்டரிவாதி


1.திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள்;பக்.268-69