பக்கம் எண் :

236விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

கூட,  போராட்ட  உணர்ச்சியில்  பேசி,  சட்ட  மன்றத்தையும் பொதுக்கூட்ட
மேடையாக மாற்றினார்.

     மகாகனம்  சீனிவாச சாஸ்திரி, கோபாலகிருஷ்ண கோகலே, எஸ்.சத்திய
மூர்த்தி  போன்ற  பெருநாவலர்கள்  அந்நாளில்  செய்த  வீர  முழக்கங்கள்
சட்டமன்ற  நடவடிக்கைக் குறிப்பேடுகளிலே பதியப் பெற்றிருந்தும், அவற்றில்
சிறந்த - சரித்திர  முக்கியத்துவம் வாய்ந்த சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு
நூல்வடிவில்    இதுவரை    வெளியிடப்   பெறாதது    பெருங்குறையாகும்.
இங்கிலாந்துப்  பாராளுமன்றத்திலே  லார்டு  பர்ஹன்ஹெட், சர்ச்சில் போன்ற
மாமேதைகள்  நிகழ்த்திய  வரலாற்றுச்  சிறப்புமிக்க  சொற்பொழிவுகள்  நூல்
வடிவில்  வெளியிடப்பட்டு,  அந்நாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகின்றன.
காரணம்,  அவர்கள்  தங்கள்   தாய்மொழியில்   சொற்பொழிவாற்றியதுதான்.
பாரதப்  பெருநாவலர்கள்   உலகமொழியான  ஆங்கிலத்தில்  பேசியிருந்தும்,
வரலாற்றுச்   சிறப்புமிக்க -  சுதந்திரப்  போராட்ட  காலத்தில்  நிகழ்த்திய -
சொற்பொழிவுகள்  கூட  இதுவரை  நூல்   வடிவம்  பெறாததற்குக் காரணம்,
ஆங்கிலம் இந்நாட்டு மக்களுக்கு அன்னிய மொழியாக இருப்பதுதான்.

      மேடைத்   தமிழ்   வளர்த்த   பேச்சாளர்களிலே   பலர்  இராசத்து
வேஷமாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை  விதிக்கப்பெற்றனர்.
இராசத்துவேஷமாகப்    பேசியதற்காகத்   தண்டனை   பெறாத   மேடைப்
பேச்சாளரே  இல்லையென்று  சொல்லிவிடலாம்.  ஆம்; ஆண்டுக் கணக்கில்
சிறைவாசம்  அனுபவித்து  மேடைத்  தமிழ்   வளர்த்தனர்   தேசியவாதிகள்.
தமிழகத்திலே  ராஜாஜி,  பெரியார்  ஈ.வெ.ரா., டாக்டர். பி.வரதராசலு  நாயுடு
போன்ற  பெருந்தலைவர்கள்  அரச  நிந்தனையாகப் பேசியதற்காகச்  சிறைத்
தண்டனை பெற்றனர்.

     வ.உ.சிதம்பரனார்,  அரச  நிந்தனைக்  குற்றத்திற்காக   ஒரு   ஆயுள்
தண்டனையும்,  அப்படிப்  பேசிய சுப்பிரமணிய சிவாவுக்குத் தன் இல்லத்தில்
தங்க  இடமும்  உண்ண  உணவும்  அளித்ததற்காக   இன்னொரு   ஆயுள்
தண்டனையுமாக இரண்டு ஆயுள் காலச் சிறைத் தண்டனை பெற்றார்.

'பேசியதே குற்றம்!'

      சிதம்பரனாருக்குக் கொடுந்தண்டனை விதித்த ஆங்கிலேயரான நீதிபதி
பின்ஹே      என்பவர்,     "இந்தியாவில்     மக்களுக்கு    வாக்குரிமை