பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 237

இல்லாத   காரணத்தால்   அவர்களைக்  கூட்டிவைத்து  அரசியல்  விஷயம்
பேசுவதே குற்றம்" என்றார். அவரது தீர்ப்பின் ஒரு பகுதி வருமாறு:

     "இங்கிலாந்தில்  அரசியல்   விஷயமாகப்   பேசுகிறவன்   தன்னுடைய
வாக்காளர்களைப் பார்த்துப் பேசுகிறான். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை
இருக்கிறது.  அந்த  வாக்கை  அடுத்த  தேர்தல்  சமயம்  வரும்போது  தன்
பக்கமாய்க் கொடுக்கத் தூண்டும் நோக்கத்துடன் பேசுகிறான்.

      "இந்நாட்டிலோ  அம்மாதிரிச்   செய்ய  வாய்ப்பு  இருப்பதாகக்  கூற
முடியாது. திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் உள்ள சாதாரண மக்களுக்கு
வாக்குரிமை  இல்லை.  ஆகையால்  ஒருவன்  மக்களைக்   கூட்டி வைத்துப்
பேசக்கனவிலும்  நினைக்க  மாட்டான். ஏனெனில் தங்களுடைய விருப்பத்தை
நிறைவேற்ற அவர்களுக்குச் சக்தியில்லை. இந்நாட்டில் அரசியல் விஷயத்தைப்
பற்றிப்  பேசும்  ஒருவன்  யாரைப்  பார்த்துப் பேசுகிறானோ அவர்களுக்குச்
சட்டப்படி  அமைந்திருக்கும் சக்தி  எதையும்  உபயோகிப்பதற்கில்லை.  பின்
எந்த எண்ணத்தோடு பேசுகிறான்?

     ஜனக்கூட்டத்திற்கு  உள்ள  ஒரே  சக்தியைப்  பிரயோகிக்கத்  தூண்டு
வதற்குத்தான்  பேச  வேண்டும்.  அதாவது  ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள
உடற்பலத்தை   உபயோகிக்கும்படித்   தூண்டித்தான்   பேசுகிறான்.    இது
அபாயகரமானதாகும்"

     அந்நாளில்,  சாதாரணக் காலங்களில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள்
நடத்த  போலீசார்  அனுமதிப்பர். அப்போதும் ஒருசில ஊர்களில்- அதாவது,
எளிதில்  உணர்ச்சிவயப்படும்  மக்கள்  நிறைந்த ஊர்களிலே, பொதுக்கூட்டம்
நடத்த  அனுமதி  மறுக்கப்படும்.  மற்றும்,  நாடு  முழுவதிலும்  போராட்டக்
காலத்திலே காங்கிரஸ் மகாசபை சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்
பட்டிருக்குமாதலால்,  நாட்டில்  எந்த  ஊரிலுமே  பொதுக்கூட்டம்  போட்டு
அரசியல்  பேச  முடியாது.  அந்தக்  காலங்களில் சட்டத்தை  மீறிப் பொதுக்
கூட்டங்களும்   மாநாடுகளும்   நடத்திச்    சிறைத்தண்டனை    பெறுவர்
தேசியவாதிகள்.

     சட்ட விரோதமாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு விளம்பரம் செய்யவும்
வசதி      இருக்கவில்லை    ஆம்;     விளம்பரத்துண்டுப்      பிரசுரம்