செய்யக்கூடியது, தனது சொந்த இரத்தத்தைத் தவிரவேறு எதுவும் இல்லை.
எனவே, அதையே அவளுடைய திருவடிகளில் அர்ப்பணஞ் செய்கிறேன்." "இந்தியாவுக்கு இப்போது தேவைப்படும் படிப்பினை, எப்படி சாவது
என்பதை அறிந்து கொள்வதே, இதைப் போதிப்பதற்குள்ள ஒரேவழி நாமே
சாவதுதான். ஆகையால், நான் உயர்ந்த லட்சியத்திற்கு உயிரைக் கொடுத்துக்
கீர்த்தியுடன் சாகிறேன்.
"கடவுளிடம் ஒன்றே ஒன்றுக்காகத்தான் பிரார்த்தனை செய்கிறேன்.
என் தாய்நாடு தன்னுடைய லட்சியத்தில் வெற்றியடைந்து மனிதவர்க்கத்தின்
நன்மைக்காகவும் கடவுளின் அருளுக்காகவும் சுதந்திரத்துடன் வாழத்
தொடங்கும் வரையில், நான் இதே தாய்நாட்டின் மகனாகப் பிறந்து, இதே
தெய்வீக லட்சியத்திற்காகத் திரும்பவும் சாக அருள வேண்டும். இதுவே என்
பிரார்த்தனை. வந்தே மாதரம்."1
பரமானந்தரின் வாய்மை
இந்தியாவில், பாய் பரமானந்தர் மீது பிரிட்டிஷ் ஆட்சியைப்
பலாத்காரத்தின் மூலம் கவிழ்க்கச் சதிசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,
அவருக்கு மூன்று விசேஷ கமிஷனர்கள் அடங்கிய நீதிமன்றத்தில் மரண
தண்டனை விதிக்கப்பெற்றது. பின்னர், அது தீவாந்தரத் தண்டனையாக
மாற்றப்பெற்றது.
மாவீரர் பாய் பரமானந்தர் நீதிமன்றத்திலே உண்மைகளை
மறைக்காமல், மறுக்காமல் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தந்தார். தமது
வாக்குமூலத்தால் மரண தண்டனை கிடைக்குமென்று தெரிந்திருந்தும்
வாய்மையைக் கடைப்பிடித்ததற்காக அந்த மாவீரரைப் பாராட்டி
காந்தியடிகள் தமது 'யங் இந்தியா'வில் எழுதியது வருமாறு:
"பாய் பரமானந்தரது தேசபக்தி உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது. அவர்
தேசிய நோக்கங்களுக்காகப் பலாத்காரத்தை வெறுக்கும் தேசபக்தர். அவர்
இங்கிலாந்துக்குச் சென்றபின், அங்கே சியாம்ஜி கிருஷ்ண வர்மாவைத்
தலைவராகக் கொண்ட பலாத்கார கோஷ்டியுடன் அவருக்குத் தொடர்பு
ஏற்பட்டது. மனத்தைக் கவரும் ஆசாபாசத்திற்கிடையேயும், அவரது
சத்தியநெறி எப்போதும் போல் மிகப் பிரகாசமாகச் சுடர்விட்டுக்
கொண்டிருந்தது.
1.காந்திநூல்கள் தொகுப்பு 1;பக்.67