பக்கம் எண் :

242விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

              பத்திரிகை உலகில் தமிழ்த் தொண்டு

     பத்தொன்பதாம்    நூற்றாண்டில்   தோன்றிய   செய்தி  இதழ்களும்
கருத்திதழ்களும் நாட்டு  மொழிகளின் வளர்ச்சிக்குப் பயன்பட்டிருக்கின்றன.
அந்த நூற்றாண்டின் பிற்பாதியில்  ஏற்பட்ட  தேசிய எழுச்சியானது தமிழ்ப்
பத்திரிகை    வளர்ச்சிக்குப்     பெரிதும்    உதவியிருக்கிறது.   தேசியத்
தலைவர்களிலே   மிகப்   பெரும்பாலோர்   பத்திரிகை அதிபர்களாகவோ,
ஆசிரியர்களாகவோ   இருந்துள்ளனர்.   விடுதலைக்  கிளர்ச்சியும் தமிழ்ப்
பத்திரிகைத்    துறையும்   சேர்ந்தே வளர்ந்தன. ஆம்; அவை இரட்டைக்
குழந்தைகள்.

'தந்தை'ஜி.சு.ஐயர்

     ஜி. சுப்பிரமணிய ஐயர்  தமிழ்ப்   பத்திரிகையுலகின்  தந்தையாகக்
கருதப்படுகின்றார்.    அவர்,    வார   இதழாக  1882ல் 'சுதேச மித்திரன்'
பத்திரிகையைத்   தொடங்கினார்.  1889ல்  அதனை நாளிதழாக மாற்றினார்.
அவரே   அதன்   ஆசிரியராகவும்   இருந்து  1915  ஆம்  ஆண்டுவரை
பணியாற்றினார்.   விடுதலைப்     போரின்    ஆரம்பக்     கட்டத்திலே
'சுதேசமித்திரன்'    பத்திரிகை   ஆற்றியுள்ள   பணி பெரிதும்  பாராட்டத்
தக்கதாகும்.    மகாகாவி   சி.    சுப்பிரமணிய   பாரதியார்  அவர்களைத்
துணையாசிரியராகப் பெற்ற பெருமையும் இந்தப் பத்திரிகைக்கு உண்டு.

      தமிழ்ப் பத்திரிகை உலகின் வரலாற்றிலே ஜி. சுப்பிரமணிய  ஐயருக்கு
அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர்-வரத்தக்க சிறப்பினைப்  பெற்றவர்
சி. சுப்பிரமணிய  பாரதியாவார். இவர், 1904 ஆம் ஆண்டு  தொடங்கி 1921
ஆம்  ஆண்டு  வரை - அதாவது, தமது மண்ணுலக வாழ்வு  முடியும்வரை
பத்திரிகைத்  தொழிலோடு தொடர்பு கொண்டிருந்தார். அத்துறையில்  அவர்
அடைந்த   இன்னல்கள்,  அவருக்கு   ஏற்பட்ட   பொருள்    இழப்புகள்
அவரால்   தாங்கிக்   கொள்ள   இயலாதவையாக    இருந்தன.   அப்படி
இருந்தும்,நாட்டுப் பற்று   -   மொழிப்பற்று   காரணமாக,   தமது  எழுது