பக்கம் எண் :

244விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

சக்தி'யின்   கலை   வீசியது.   தமிழ்   நாட்டினின்றும்   தத்தம்  தாய்நாடு நோக்கும்  ஐரோப்பியப்  பாதிரிமார்  பலர்   “நவசக்தி''யை மறப்பதில்லை".1

த.நா.கா.வின் இரவல் ஏடு!

     ஒரு   அரசியல் கட்சி தனக்கென வெற்றிகரமான ஒரு செய்தி  இதழை
நடத்துவது  இந்நாளிலேயே  இயலாத காரியமென்றால், அந்நாளின் நிலைமை
சொல்லவும்  வேண்டுமோ?   மக்களிடையே    எல்லையற்ற   செல்வாக்குப்
பெற்றிருந்த  காங்கிரசாலும்  தனியாக  ஒரு நாளிதழை நடத்த இயலவில்லை.
ஆந்திரப்  பெருந்தலைவரான  டி.பிரகாசம்  அவர்கள்  'சுயராஜ்யா'   எனும்
பெயரில்   ஆங்கில    நாளிதழொன்றை   சென்னை   நகரில்    நடத்திக்
கொண்டிருந்தார். அவருக்கு  ரூபாய் பத்தாயிரம் உதவி புரிந்து, தமிழிலேயும்
‘சுயராஜ்யா’   நாளிதழை நடத்துமாறு செய்தது தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி.
அதன் விளைவு என்ன? இதோ, திரு.வி.க.கூறுகிறார்.

      "அது    நிறுத்தப்பட்டதும்   தமிழ் நாட்டு காங்கிரஸ் கூட்டத்துக்கும்
'சுயராஜ்யா' கம்பெனிக்கும் சட்டப் போர் நிகழ்ந்ததை இங்கே வெட்கத்துடன்
குறிக்கின்றேன்."2

     வ.இராமசாமி ஐயங்கார் (வ.ரா), எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சுத்தானந்த
பாரதியார்  ஆகியோர்  தமிழ் 'சுயராஜ்யா'வில் துணையாசிரியர்களாகப் பணி
புரிந்தனர்.

      திரு.வி.க.   'தேசபக்த’னைத்    தொடங்கும்போது   ஜி.சுப்பிரமணிய
ஐயருடைய  'சுதேசமித்திரன்'  வெளிவந்து கொண்டிருந்தது என்றாலும், அது
தமிழ் மொழியின்   வளத்தை  வெளிப்படுத்தவில்லை  என்ற குறை மொழிப்
பற்றுடைய  தேசபக்தர்களுக்கு  இருந்து  வந்தது.  'சுதேசமித்திரன்' தொழில்
துறையில்   ஓரளவு   வெற்றிகரமாக   விளங்கியதென்றாலும்,  அரசியலிலே
தீவிர காங்கிரஸ்வாதிகளின் முற்போக்கு  அது முட்டுக்கட்டையாக இருந்தது.
அதனாலேயே   தீவிர    காந்தியவாதியான    திரு.வி.க.,  'தேசபக்த'னைத்
தொடங்கினார்.  ‘சுதேசமித்திரனு'டைய  தமிழ் நடைக்கும், 'தேசபக்தனு'டைய
தமிழ் நடைக்கும் மிகுந்த வேற்றுமையிருந்தது.


1. திரு.வி.க. வாழ்க்கைக்குறிப்புகள்;பக்.290-91.
2. திரு.வி.க.வாழ்க்கைக்குறிப்புகள் ; பக்.209.